உலக சாதனை படைத்திருக்கும் நண்பர் பார்த்திபனுக்கு வாழ்த்து: ரஜினிகாந்த்!

இரவின் நிழல் படக்குழுவினருக்கு நடிகர் ரஜினிகாந்த் கடிதம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சினிமாவில் ஏதாவது வித்தியாசமாக செய்ய துடிப்பவர் பாத்திபன். அப்படிதான் ஒத்த செருப்பு படத்தில் ஒரே ஒரு கதாப்பாத்திரத்தை மட்டும் திரையில் காண்பித்து பாராட்டுக்களை குவித்தார். இந்நிலையில் சாதனை முயற்சியாக ஒரே ஷாட்டில் இரவின் நிழல் என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார் பார்த்திபன். இரவின் நிழல் படம் விமர்சனத்துக்குள்ளானாலும் பலரும் பார்த்திபனின் இந்த முயற்சியை பாராட்டி வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த், இரவின் நிழல் படக்குழுவை பாராட்டி கைப்பட கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியுள்ளதாவது:-

இரவின் நிழல் படத்தை அசாத்திய முயற்சியுடன் ஒரே ஷாட்டில், முழு படத்தையும் எடுத்து அனைவருடைய பாராட்டுகளையும் பெற்று, உலக சாதனை படைத்திருக்கும் நண்பர் பார்த்திபன் அவர்களுக்கும், அனைத்து பட குழுவினருக்கும் மதிப்பிற்குரிய ஏ.ஆர். ரகுமான் அவர்களுக்கும் முக்கியமாக படம்பிடித்த ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.