நடிகர் விஷால் பிரபல நடிகை ஒருவரை காதல் திருமணம் செய்யவுள்ளதாக இணையத்தில் செய்திகள் பரவி வந்தது. இது குறித்து தற்போது நடிகை அபிநயா விளக்கமளித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷால் தற்போது ’லத்தி’, ‘மார்க் ஆண்டனி’ மற்றும் ‘துப்பறிவாளன் 2’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள் அடுத்தடுத்து ரிலீசாக உள்ளது.
இந்நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் ‘மார்க் ஆண்டனி’ படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை அபிநயா நடித்து வரும் நிலையில் அவருக்கும் விஷாலுக்கும் விரைவில் காதல் திருமணம் நடைபெறவுள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு வதந்தி பரவி வருகிறது.
இதுகுறித்து தற்போது நடிகை அபிநயா விளக்கமளித்துள்ளார். அதில், ’மார்க் ஆண்டனி’ படத்தில் நான் விஷாலின் மனைவியாக நடித்து வருகிறேன். அது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகிய நிலையில் நிஜமாகவே எங்களுக்கு திருமணமாகி விட்டது போன்ற வதந்திகளை கிளப்பப்பட்டு வருகிறது. இந்த தகவல் முழுக்க முழுக்க பொய்யானது என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் விஷால் – அபிநயா திருமணம் வதந்தி என்பது உறுதியாகியுள்ளது.
நடிகை அபிநயா சசிகுமாரின் ‘நாடோடிகள்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். வாய் பேச முடியாத இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். ஏற்கனவே அபிநயா விஷாலுடன் ’பூஜை’ படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.