பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பலருக்கும் தெரிந்த ஜூலியின் அம்மன் வேடத்தைப் பற்றி ராதாரவி பேசிய வீடியோவை ரசிகர்கள் பலர் பகிர்ந்து வருகின்றனர். அந்த காலத்தில் கே ஆர் விஜயாவை பார்க்கும் போது கையெடுத்து கும்பிட தோணும் ஆனால் இப்போ ஜூலியின் யின் வேடத்தை பார்க்கும் போது “கருமம்” என்னத்த சொல்லுவது என்று முடித்து விட்டார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது பல சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. ஆனால் பலருக்கும் புதுமையாகவும் விருவிருப்பாகவும் இருந்த சீசன் என்றால் முதல் சீசன் என்று கூறுவர். முதல் சீசனில் போட்டியாளர்களில் ஒரு சிலரை யாரும் அவ்வளவு எளிமையாக மறந்து விட மாட்டார்கள் அதில் ஒருவராக ஜூலி இருந்து வருகிறார். இவர் மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது தீவிரமாக கத்தியே பிரபலமடைந்து விட்டார். இவருடைய போராட்டத்தை பார்த்து மிரண்டு போன விஜய் டிவி இவரை ஒரு போட்டியாளராக உள்ளே இறக்கினால் நிகழ்ச்சிக்கு சுவாரசியம் பஞ்சம் இருக்காது என்பதை அப்போதே தெரிந்து பக்காவாக பிளான் பண்ணி உள்ளே இறக்கி விட்டார்கள்.
இந்த நிலையில் தற்போது ஜூலி அம்மன் வேடமிட்டு நடித்த அம்மன் தாயே திரைப்பட ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. அது குறித்து எம் ஆர் ராதா பேசியிருக்கிறார். அதில், போராட்டத்தில் கத்திய அந்தப் பெண் ஜூலி அம்மன் வேஷம் போட்டு ஒரு படத்தில் பண்ணி இருக்கு, அம்மன் என்றால் கே.ஆர். விஜயா போன்ற சில நடிகைகளை சொல்லலாம். அவர்களை பார்க்கும்போது கையெடுத்து கும்பிட தோணும். நான் இதுவரைக்கும் பல இடங்களில் சாமி வந்து ஆடுவதை பார்த்திருக்கிறேன். அப்படியே தத்ரூபமாக இருக்கும். அந்த வேடங்களை போட்டுக் கொண்ட நடிகைகளை பார்க்கும்போது. ஆனால் இந்த ஜூலி பொண்ணு அம்மன் வேடம் போட்டிருக்கு போடட்டும்.. அம்மன் என்ன கண்ணையா குத்த போகுது!? கருமம் என்னத்த சொல்லுவது! என்று அவர் கூறியிருக்கிறார். இந்த வீடியோவை நெட்டிசன்கள் பலர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.