நடிகர் அஜித்தின் துணிவு படம் பொங்கலையொட்டி ரிலீசாகவுள்ளது. இதையொட்டிய போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளன. துணிவு படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள், ஸ்டில்ஸ் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.
நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் துணிவு. இந்தப் படத்தை ஹெச் வினோத் இயக்க, போனி கபூர் தயாரித்துள்ளார். படத்தின் சூட்டிங் ஐதராபாத், சென்னை, விசாகப்பட்டினம் மற்றும் பாங்காக் போன்ற இடங்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் முன்னதாக தீபாவளியையொட்டி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படத்தின் சூட்டிங் தாமதம் உள்ளிட்ட காரணங்களால் படம் தற்போது பொங்கல் ரிலீசாக வெளியாகவுள்ளது. விஜய்யின் வாரிசு படத்துடன் துணிவு படமும் மோதவுள்ள நிலையில், ரசிகர்கள் சூப்பர் கொண்டாட்டத்துடன் படத்தை வரவேற்க காத்திருக்கின்றனர்.
படம் பேங்க் கொள்ளையை மையமாக கொண்டு த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தில் ஹீரோவாகவும் வில்லனாகவும் அஜித் நடித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தில் மஞ்சு வாரியர் நாயகியாக நடித்துள்ளார். படத்தில் அவர் அஜித்திற்கு ஜோடியில்லை என்றும் மஞ்சு வாரியர், அமீர், பாவ்னி, சிபி சந்திரன் உள்ளிட்டவர்கள் அஜித்தின் கூட்டணியில் இருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தப்படத்தின் பல்வேறு விஷயங்களை தனது சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துக் கொண்டுள்ள ஹெச் வினோத், இந்தப் படத்தில் நெகட்டிவ் ஷேடில் அஜித் நடித்துள்ளதாக தான் கூறினால் மங்காத்தாவின் அடுத்த பாகமா என்று ரசிகர்கள் கேட்பதாக தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் அஜித்தை வேறு லெவலில் ரசிகர்கள் பார்க்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் துணிவு படம் கெட்டவர்களின் ஆட்டம் என்றும் ஹெச் வினோத் குறிப்பிட்டுள்ளார். வலிமை படம் கொடுத்த அனுபவங்களை கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் படம் குறித்த யூகங்களை ரசிகர்கள் கருத்தில் கொள்ள வேண்டாம் என்றும் படத்தின் ட்ரெயிலர் மற்றும் பாடல்கள் வெளியானவுடம் படம் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.