நகைச்சுவை படத்தில் நடிப்பது இதுவே முதல் முறை: ஐஸ்வர்ய லெட்சுமி

நகைச்சுவை படத்தில் நடிப்பது இதுவே முதல் முறை. என்னை தவறான எண்ணத்தில் தொட்டவரை அடித்தேன் என்று நடிகை ஐஸ்வர்ய லெட்சுமி கூறியுள்ளார்.

கேரளாவை பூர்விகமாக கொண்டவர் நடிகை ஐஸ்வர்ய லெட்சுமி. 2017ஆம் ஆண்டு மலையாள மொழியில் வெளியான நஞ்சுகளுடே நாட்டில் ஓரிடவேல என்ற படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார் ஐஸ்வர்ய லெட்சுமி. தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த ஐஸ்வர்ய லெட்சுமி, தமிழில் ஆக்ஷன் படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து தனுஷின் ஜகமெ தந்திரம், கார்கி, கேப்டன், உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி என்ற கதாப்பாத்தில் நடித்தார். அவரது கதாப்பாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கார் ஐஸ்வர்ய லெட்சுமி என ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்கள் பலரும் பாராட்டி தள்ளினர். தொடர்ந்து தெலுங்கு மலையாளம் என பிஸியாக உள்ள ஐஸ்வர்யலக்ஷ்மி பொன்னியின் செல்வன் 2 படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஐஸ்வர்ய லெட்சுமி நடிப்பில் கட்டா குஸ்தி திரைப்படம் கடந்த 2ஆம் தேதி வெளியானது. இந்தப் படத்தில் குஸ்தி வீராங்கனையாக நடித்திருந்தார் ஐஸ்வர்யலெட்சுமி. நகைச்சுவை படமான இப்படத்தில் ஐஸ்வர்ய லெட்சுமியின் கதாப்பாத்திரத்தை பாராட்டி வருகின்றனர் நெட்டிசன்கள். இந்நிலையில் தான் நிஜ வாழ்க்கையில் ஒருவரை அடித்ததாக பகீர் தகவலை கூறியுள்ளார். இதுதொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், இதுவரை எந்த நகைச்சுவை படத்திலும் தான் நடித்ததில்லை என்றும், நகைச்சுவை படத்தில் நடிப்பது இதுவே முதல் முறை என்றும் கூறியுள்ளார் ஐஸ்வர்ய லெட்சுமி. மேலும் கட்டா குஸ்தி திரைப்படம் தனக்கு ஒரு சவாலாக இருந்தது என்றும் சமீப காலமாக நகைச்சுவை படங்கள் வெளியாவதில்லை என்றும் கவலையுடன் கூறியுள்ளார் ஐஸ்வர்யலெட்சுமி.

மேலும் உணர்வுப்பூர்வமான கதாப்பாத்திரங்களை தான் ஈஸியாக நடித்து விடுவேன் என்றும் இதுபோன்ற நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் நடிப்பது தனக்கு ரொம்பவே கஷ்டம் என்றும் கூறியுள்ளார். குஸ்தி வீராங்கனையாக தான் நடித்தது தனக்கு பெரும் சவாலாக இருந்தது என்று கூறியுள்ள ஐஸ்வர்ய லெட்சுமி, ஏற்கனவே தான் ஒரு நபரை அடித்தாக தெரிவித்துள்ளார். அந்த நபர் தன்னை தவறான எண்ணத்தில் தொட்டத்தில் அந்த நபரை அடித்ததாகவும், சமீபத்தில் அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்றும் நடிகை ஐஸ்வர்ய லெட்சுமி தெரிவித்துள்ளார்.