ஜெய்ப்பூர் அரண்மனையில் திருமணத்தை முடித்த நடிகை ஹன்சிகா மோத்வானி தனது கணவருடன் மும்பை திரும்பியுள்ளார்.
பிரபல நடிகையான ஹன்சிகா மோத்வானி குழந்தை நட்சத்திரமாக திரைத்துறைக்கு அறிமுகமானார். தொடர்ந்து ஹீரோயினாக அறிமுகமான நடிகை ஹன்சிகா மோத்வானி, தமிழ் சினிமாவில் மாப்பிள்ளை படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து தமிழ் தெலுங்கு மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். நடிகை ஹன்சிகா மோத்வானி, தனது நண்பரும் தொழில் பார்ட்னருமான சோஹேல் கதூரியாவை காதலித்து வந்தார். இதனை தொடர்ந்து இருவருக்கும் ஜெய்ப்பூரில் உள்ள முண்டோடா அரண்மனையில் கடந்த 4ஆம் தேதி சிந்தி முறைப்படி திருமணம் நடைபெற்றது. அதற்கு முன்பாக ஹல்தி, சங்கீத், நளங்கு என திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் களைக்கட்டின. ஹன்சிகா மோத்வானி சோஹேல் திருமணத்திற்கு சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் திருமணத்தை முடித்துக் கொண்டு ஹன்சிகா மோத்வானியும் சோஹேல் கதூரியாவும் நேற்று மும்பை திரும்பினர். மும்பை விமான நிலையத்தில் தனது கணவரின் கையை கோர்த்தப்படி இருவரும் நடந்து வந்தனர். அப்போது டார்க் பிங்க் கலர் சுடிதார் அணிந்திருந்தார் ஹன்சிகா மோத்வானி. சோஹேல் கதூரியா பிங்க் கலர் ஷெர்வானி அணிந்திருந்தார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஹன்சிகா மோத்வானி தங்களின் திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு எல்லாம் நன்றி தெரிவித்தார்.