திருமணம் முடிந்த கையோடு கணவருக்கு அல்வா கொடுத்த ஹன்சிகா!

ஹன்சிகா மோத்வானி தனது கணவருக்கு குடும்ப சம்பிரதாயப்படி தனது கையாலேயே இனிப்பு சமைத்து பரிமாறிய போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை ஹன்சிகா மோத்வானி குழந்தை நட்சத்திரமாக சினிமாத்துறைக்கு அறிமுகமானார். தொடர்ந்து ஹீரோயினாகவும் தடம் பதித்த நடிகை ஹன்சிகா மோத்வானி, இந்தி, தமிழ், தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்துள்ளார். தமிழில் விஜய், சூர்யா, தனுஷ், ஜெயம் ரவி, சிம்பு, விஷால், கார்த்தி, சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் கடந்த 4 ஆம் தேதி தனது நீண்ட நாள் காதலரான சோஹேல் கதூரியாவை திருமணம் செய்து கொண்டார். ஜெய்ப்பூரில் உள்ள முண்டோடா அரண்மனையில் ஹன்சிகா சோஹேல் திருமணம் விமரிசையாக நடைபெற்றது. சிந்தி முறைப்படி நடைபெற்ற இவர்களின் திருமணத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து இருவரும் திருமணத்தை முடித்து கொண்டு ராஜஸ்தானில் இருந்து மும்பை திரும்பினர்.

இந்நிலையில் ஹன்சிகா மோத்வானி தனது கணவருக்கு குடும்ப சம்பிரதாயப்படி தனது கையாலேயே இனிப்பு சமைத்து பரிமாறிய போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. பெஹ்லி ரசோய் என்ற அல்வா ஐட்டத்தை தனது காதல் கணவர் சோஹேல் கதூரியாவுக்கு செய்து கொடுத்துள்ளார் ஹன்சிகா மோத்வானி. தங்களின் குடும்ப சம்பிரதாய சடங்குகளில் ஒன்றான கணவருக்கு இனிப்பு செய்து பரிமாறுவதை அவரது கணவரான சோஹேல் கதூரியா தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் ஹன்சிகா.

அவரது இந்த பதிவுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது. நடிகை ஹன்சிகா மோத்வானி திருமணம் முடித்த கையோடு வெளிநாடுகளுக்கு ஹனிமூன் செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏற்கனவே ஒப்பந்தமான படங்களின் படப்பிடிப்பை முடித்து விட்டுதான் ஹனிமூன் செல்ல உள்ளார் என தகவல் வெளியாகி வருகிறது. ஹன்சிகா மோத்வானி தற்போது தமிழில் ரவுடி பேபி, கார்டியன் உட்பட 4 படங்களில் நடித்து வருகிறார். இதேபோல் தெலுங்கில் மை நேம் இஸ் ஸ்ருதி என்ற படத்திலும் நடித்து வருகிறார். தமிழில் ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள பார்ட்னர் படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது குறிப்பிடத்தக்கது.