பெண் வெறுப்பு என்பது நாம் போராட வேண்டிய ஒரு தீமை: திவ்யா ஸ்பந்தனா

கன்னட சினிமா மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் திவ்யா ஸ்பந்தனா. இந்நிலையில், தொடர்ந்து நடிகைகள் குறித்து ட்ரோல் செய்யப்படும் சர்ச்சைகள் குறித்து தனது டுவிட்டரில் காட்டமாக பதிவிட்டுள்ளார்

கன்னடத்தில் அபி திரைப்படம் மூலம் அறிமுகமான திவ்யா, தமிழில் சிம்புவுடன் குத்து படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிகளில் பிஸியாக நடித்து வந்த திவ்யா ஒரு கட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து எம்பியாகவும் பதவி வகித்தார். தற்போது பட தயாரிப்புகளில் கவனம் செலுத்தி வரும் திவ்யா, நடிகைகள் மீதான சர்ச்சைகள் குறித்து காட்டமாக டுவீட் செய்துள்ளார். திய்வா ஸ்பந்தனாவின் இந்த டிவிட்டர் பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

திவ்யா ஸ்பந்தனா தனது டுவிட்டரில், சமந்தா, சாய் பல்லவி, ராஷ்மிகா மந்தனா, தீபிகா படுகோன் ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். அதில், “சமந்தா தனது விவாகரத்துக்காகவும், சாய் பல்லவி அரசியல் ரீதியாக தனது கருத்தை தெரிவித்ததற்காகவும், ராஷ்மிகா மந்தனா தனது கருத்தை வெளிப்படையாக பேசியதற்காகவும், தீபிகா படுகோன் அவரது ஆடைக்காகவும், அவர்களைப் போல பல பெண்கள் ட்ரோல் செய்யப்படுகின்றனர். தேர்வு சுதந்திரம் நமது அடிப்படை உரிமை. பெண்கள் மா துர்காவின் உருவகம் கொண்டவர்கள். பெண் வெறுப்பு என்பது நாம் போராட வேண்டிய ஒரு தீமை” எனக் குறிப்பிட்டுள்ளார்.