கவிஞர் வைரமுத்துவை பார்க்க தனியாக செல்ல வேண்டாம் என்று பிரபல விஜேவான அர்ச்சனாவுக்கு வார்னிங் கொடுத்துள்ளார் பிரபல பாடகியான சின்மயி.
பிரபல பாடகியாக இருப்பவர் சின்மயி. ஏஆர் ரக்மான் இசையில் கன்னத்தில் முத்தமிட்டாள் படத்தின் மூலம் பாடகியாக அறிமுகான சின்மயி தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். தேசிய விருது உட்பட பல்வேறு விருதுகளையும் குவித்துள்ளார் சின்மயி. ரேடியோ ஜாக்கி, தொலைக்காட்சி தொகுப்பாளர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என பல முகங்களை கொண்டுள்ள சின்மயி, சமந்தா, த்ரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகைகளுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார். ட்ரான்ஸ்லேஷன் கம்பெனியை நடத்தி வரும் சின்மயி ஸ்கின் கேர் கம்பெனியையும் சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடத்தி வருகிறார். கடந்த 2014 ஆம் ஆண்டு நடிகர் ராகுல் ரவீந்தரனை காதலித்து திருமணம் செய்தார் சின்மயி. இவர்களுக்கு கடந்த ஜூன் மாதம் இரட்டை ஆண் குழந்தை பிறந்தது.
சின்மயி, பிரபல பாடலாசிரியரான கவிஞர் வைரமுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக மீடூவில் குற்றம்சாட்டினார். வெளிநாட்டிற்கு இசை நிகழ்ச்சிக்காக சென்ற போது வைரமுத்து தவறாக நடக்க முயற்சித்தாக கூறினார். சின்மயின் இந்த குற்றச்சாட்டு தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் வைரமுத்துவால் பல பெண்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறிய சின்மயி, அவர்கள் தனக்கு அனுப்பிய மெயில்களையும் சமூக வலைதளங்களில் ஷேர் செய்தார். இதனால் கோலிவுட்டில் பெரும் பரபரப்பு தொற்றியது. வைரமுத்து மீது சின்மயி பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறிய பிறகு அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் விமர்சனங்கள் எழுந்தன. வைரமுத்துவின் ஆதரவாளர்கள், இப்போதும் சமூக வலைதளங்களில் சின்மயியை திட்டி தீர்த்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல சீரியல் நடிகையும் விஜேவுமான அர்ச்சனா, கவிஞர் வைரமுத்துவை சந்தித்த போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். வைரமுத்து விஜே அர்ச்சனாவின் தலையில் கை வைத்து ஆசீர்வாதம் செய்தது, அர்ச்சனாவை அணைத்தப்படி போட்டோவுக்கு போஸ் கொடுத்தது, அவருடன் பேசிக் கொண்டிருப்பது போன்ற போட்டோக்கள் இடம்பெற்றிருந்தன. இந்த போட்டோக்களை பார்த்த பாடகி சின்மயி விஜே அர்ச்சனாவுக்கு வார்னிங் கொடுத்துள்ளார்.
வைரமுத்து விஜே அர்ச்சனாவின் தலையில் ஆசீர்வாதம் செய்யும் போட்டோவை ஷேர் செய்துள்ள சின்மயி, இப்படித்தான் ஆரம்பிக்கும், தயவு செய்து அவரிடம் கவனமாக இருங்கள். அவரிடம் தள்ளியே இருங்கள். அவரை சந்திக்கும்போது யாரையாவது உடன் அழைத்துச் செல்லுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.