நடிகை நித்யா மேனன் திடீரென சினிமா தனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்றும் அதிலிருந்து விலக முடிவெடுத்தேன் என்றும் பேசியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள காதலிக்க நேரமில்லை படம் வரும் ஜனவரி 14ம் தேதி பொங்கல் விருந்தாக திரைக்கு வருகிறது. அஜித் குமாரின் விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் ரேஸில் இருந்து பின் வாங்கிய நிலையில், காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட படங்கள் களத்தில் இறங்கியுள்ளன. அந்த படம் தொடர்பாக பல யூடியூப் சேனல்களில் பேட்டியளித்து வரும் நித்யா மேனன் கலா மாஸ்டர் கேட்ட கேள்விக்கு சினிமா என்றாலே தனக்கு அலர்ஜி என்பது போல பேசியிருப்பது நித்யா மேனன் ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது.
சிறு வயதில் இருந்தே டான்ஸ் ஆடு, பாட்டுப் பாடு, கேமரா முன்பாக வந்து நடி என தன்னை தனது அம்மா தான் புஷ் செய்வார். ஆனால், சினிமா என்றாலே எனக்கு சுத்தமாக பிடிக்காது. சமீபத்தில், போதும் சினிமாவை விட்டு வேறு ஏதாவது பண்றேன். எனக்கு இது பிடிக்கவில்லை என்றே பெற்றோர்களிடம் சொல்ல, அவர்களும் உனக்கு எது பிடிக்கிறதோ அதை செய்மான்னு சொல்லிட்டாங்க. அந்தளவுக்கு போன நிலையில், திடீரென கடவுள் கொடுத்த லஞ்சம் தான் என்னை மீண்டும் நடிக்க வைத்துக் கொண்டிருக்கிறது எனப் பேசியுள்ளார்.
சினிமாவை விட்டு முழுவதும் விலகி விடலாம். 15 வருடங்கள் நடித்துவிட்டோம் என நினைத்துக் கொண்டிருந்த நிலையில், திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்த நித்யா மேனனுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. அந்த விருது கிடைத்த நிலையில் தான் நம்மை சினிமா விடாது என்றும் கடவுள் நமக்குத் தரும் லஞ்சம் இது என நினைத்துக் கொண்டேன் என்றார்.
சினிமாவை விட்டு விலகும் அளவுக்கு முடிவெடுக்க என்ன காரணம்? நல்ல நடிகையான நீங்கள் சினிமாவை விட்டு விலகினால் ரசிகர்கள் என்ன செய்வாங்க பாவம் என கலா மாஸ்டர் கேட்க, சிறு வயதில் இருந்தே கேமரா முன்னாடி நிற்கவே பிடிக்காது. தனிப்பட்ட சுதந்திரத்தை ரொம்பவே சினிமா நடிகையாக மாறியதில் இருந்து மிஸ் செய்கிறேன். இயல்பான வாழ்க்கை எனக்கு கிடைக்காத ஃபீலிங் எப்பவுமே என்னை டிஸ்டர்ப் பண்ணிட்டே இருக்கும். வைல்டு லைஃப் போட்டோகிராஃபர் போல வாழ ஆசைப்பட்டேன் என்றும் நித்யா மேனன் சினிமாவை தான் ஏன் வெறுக்கிறேன் என்பதற்கு பல காரணங்களை அடுக்கியுள்ளார்.
காதலிக்க நேரமில்லை படத்தில் நான் வொண்டர் உமனாகவும் ஜெயம் ரவி கேப்டன் அமெரிக்கா போலவும் டிரெஸ் போட்டுக் கொண்டு நடித்த காட்சிகள் தான் ரொம்பவே பிடித்த சீன். நிச்சயம் அந்த காட்சிகள் தியேட்டரில் ரசிகர்களுக்கும் பிடிக்கும் என நினைக்கிறேன் எனக் கூறியுள்ளார்.