ஜெயம் ரவி, நித்யா மேனன் நடித்துள்ள ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் ‘காதலிக்க நேரமில்லை’. இந்தப் படத்தில் யோகிபாபு, வினய், ஜான் கொக்கன், லட்சுமி ராமகிருஷ்ணன், வினோதினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு நேற்று (ஜன.07) வெளியிட்டுள்ளது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு முழுநீள காதல் கதையின் ஜெயம் ரவி நடித்திருக்கிறார். தொடக்கத்திலேயே தான் கர்ப்பமாக இருப்பதாக பெற்றோரிடம் குண்டை தூக்கிப் போடும் நித்யா மேனனின் பார்வையில் விரிகிறது ட்ரெய்லர். தொடர்ந்து நாயகன் ஜெயம் ரவி, இன்னொரு ஹீரோயின் ஆன டி.ஜே.பானு ஆகியோரின் அறிமுகங்கள் ஈர்க்கின்றன.
இன்றைய இளம் தலைமுறையினரை ஈர்க்கக் கூடிய வகையில் வசனங்களும் காட்சிகளும் ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ளன. படத்தின் பிரதான கதை முக்கோண காதலை பற்றியதாக இருக்கலாம். ட்ரெய்லரின் கவனித்தக்க முக்கிய அம்சம் ஏ.ஆர்.ரகுமானின் இசை. படம் வரும் ஜன.14 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.