நடிகை பிரியங்கா சோப்ரா ஹைதராபாத்தில் கோயில் தரிசனம்!

நடிகை பிரியங்கா சோப்ரா ஹைதராபாதில் உள்ள பாலாஜி கோயிலுக்கு சென்ற புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா, நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘தமிழன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பிரியங்கா, அடுத்தடுத்து படங்களில் நடிப்பார் என ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்தனர். ஆனால் ஒரே ஒரு படத்தோடு தமிழ் சினிமாவின் உறவை முறித்துக்கொண்டார். அதன்பின்னர் ஒரு படத்தில் கூட நடிக்காத பிரியங்கா, தமிழ் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்துவிட்டு பாலிவுட் சினிமாவில் அதிக கவனம் செலுத்த தொடங்கினார்.

பாலிவுட் சினிமாவில் கலக்கிய பிரியங்கா ஹாலிவுட் சினிமாவிலும் என்ட்ரி கொடுத்தார். இதன் மூலம் ஹாலிவுட் ஸ்டார் நீக் ஜோன்ஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின் வாடகைத்தாய் மூலம் பெண் குழந்தையை பெற்றெடுத்தனர். தற்போது இவர்களுக்கு மால்டி மெரி சோப்ரா ஜோன்ஸ் என்ற பெண் குழந்தை உள்ளது. பாலிவுட் சினிமாவை போல் ஹாலிவுட் சினிமாவிலும் ப்ரியங்காவுக்கு அமோக வரவேற்பு கிடைத்து.

திரைப்படங்களில் செம பிஸியாக இருக்கும் பிரியங்கா சமூக வலைத்தளங்களிலும் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். குழந்தை மற்றும் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹைதராபாதில் பாலாஜி கோயிலுக்கு சென்ற புகைப்படங்களை போஸ்ட் செய்துள்ளார். நடிகர் ராம்சரணின் மனைவியுடன் இவர் கோயிலுக்கு சென்ற இந்த புகைப்படங்கள் இணையத்தளத்தில் ஏகப்பட்ட லைக்குகளுடன் வைரலாகி வருகிறது.