சிம்புவின் 50-வது படத்தை இயக்கும் தேசிங்கு பெரியசாமி!

நடிகர் சிம்பு தனது 50-வது படம் குறித்த அப்டேட்டை அறிவித்துள்ளார். இந்தப் படத்தை இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை சிம்பு தயாரிக்கிறார்.

சிம்பு தனது சமூக வலைதள பதிவில், Atman சினி ஆர்ட்ஸ் மூலமாக தயாரிப்பாளராக ஒரு புதிய பயணத்தில் நான் அடியெடுத்து வைக்கிறேன் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கும் தேசிங்கு பெரியசாமிக்கும் ட்ரீம் ப்ராஜக்டாக உள்ள படத்தை எனது 50-வது படமாக தொடங்குவதை விட வேறு எதுவும் சிறந்தது இல்லை. இன்று எங்கள் நெஞ்சோடு கலந்து. இந்தப் புதிய முயற்சியை ஆவலோடு எதிர்நோக்கி உற்சாகமாக இருக்கிறேன். எப்போதும் போல உங்கள் அனைவரின் அன்பையும் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்! நீங்க இல்லாமல் நான் இல்ல!” என தெரிவித்துள்ளார்.

‘Atman சினி ஆர்ட்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இந்தப் படத்தை சிம்பு தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.

தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ள கதையில் நடிக்க உள்ளார் சிம்பு. ஆனால், அப்படத்தின் பொருட்செலவை மனதில் கொண்டு எந்தவொரு தயாரிப்பாளரும் முன்வராமல் இருந்தனர். முதலில் இதனை தயாரிப்பதாக இருந்த ராஜ்கமல் நிறுவனமும், தயாரிப்பு பொறுப்பில் இருந்து விலகிவிட்டது. தற்போது சிம்புவே தயாரிக்கிறார்.

இதற்கு மத்தியில் சிம்பு வேறு சில படங்களில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், சிம்புவின் 50-வது படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.