நடிகை பார்வதி தமிழ், தெலுங்கு, மலையாளம் என அடுத்தடுத்த மொழி படங்களில் பல ஆண்டுகளாக முன்னணி நாயகியாக நடித்து வருகிறார். தமிழிலும் பூ படத்தில் என்ட்ரி கொடுத்திருந்த பார்வதி தொடர்ந்து கமல்ஹாசனுடன் உத்தம வில்லன், தனுஷுடன் மரியான் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். கடந்த ஆண்டில் விக்ரமுடன் ஜோடியாக தங்கலான் படத்தில் பார்வதியின் கேரக்டர் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. சுதந்திர போராட்ட காலகட்டத்தை இந்தப் படம் மிகச்சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தது.
இந்நிலையில் அவ்வப்போது சர்ச்சை கருத்துக்களை கூறி சிக்கலிலும் மாட்டி வருகிறார் பார்வதி. அந்த வகையில் தன்னுடைய காதல் முறிவு குறித்தும் டேட்டிங் ஆப்பை தான் பயன்படுத்துவது குறித்தும் தன்னுடைய சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார். தான் டேட்டிங் ஆப்பில் உறுப்பினராக உள்ளதாக அவர் கூறியுள்ள விஷயம் அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அவ்வப்போது தான் அந்த ஆப்பில் நல்ல நபர்கள் உள்ளார்களா என்று பார்ப்பேன் என்று கூறியுள்ள பார்வதி, ஆனால் தனக்கு நேரில் பார்த்து பழகி பின்பு வரும் காதல் மீது தான் அதிக நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தன்னுடைய சினிமா துறையிலேயே நல்ல பையன் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று தான் நினைப்பதாகவும் பார்வதி தெரிவித்துள்ளார். தான் முன்னதாக ஒரு நபரை காதலித்ததாகவும் ஆனால் தன்னுடைய முன் கோபத்தால் அந்த காதல் பிரேக்கப் ஆனதாகவும் பார்வதி மேலும் கூறியுள்ளார். சிறிய விஷயங்களுக்கு கூட தான் அதிகமாக கோபப்படுவேன் என்று தெரிவித்துள்ள பார்வதி, சமீபத்தில் தன்னுடைய முன்னாள் காதலரை சந்தித்ததாகவும், தாங்கள் தற்போது நல்ல நண்பர்களாக உள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த காதல் முறிவு கொடுத்த வலியால், இனி காதலில் விழுவதற்கு முன்பு பலமுறை யோசித்தே செயல்பட முடிவெடுத்துள்ளதாகவும் பார்வதி கூறியுள்ளார்.