ரெட்ரோ படத்தின் முதல் பாடல் ‘கண்ணாடி பூவே’ வெளியானது!

நடிகர் சூர்யா நடித்த ரெட்ரோ படத்தின் முதல் பாடலை வெளியிட்டுள்ளனர்.

நடிகர் சூர்யா – கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான திரைப்படம் ரெட்ரோ. ஆக்சன் கலந்த காதல் கதையாக உருவாகியுள்ள இப்படத்தில், பூஜா ஹெக்டே நாயகியாகவும் நாசர், பிரகாஷ் ராஜ், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். மே. 1 ஆம் தேதி இப்படம் வெளியாகிறது.

முன்னதாக டீசர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், படத்தின் முதல் பாடலை இன்று வெளியிட்டுள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து, பாடிய இப்பாடலை விவேக் எழுதியுள்ளார்.