இரண்டாவது கர்ப்பத்தை உறுதிப்படுத்திய இலியானா!

நடிகை இலியானா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்திருக்கிறார்.

தமிழில் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் விஜய் ஹீரோவாக நடித்த ‘நண்பன்’ திரைப்படம் மூலம் தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானவர், நடிகை இலியானா. இவர் தற்போது மைக்கேல் டோலன் என்னும் நபருடன் திருமணம் செய்துகொண்டு, குடும்ப வாழ்க்கையை அனுபவித்து வருகிறார். இத்தம்பதியினருக்கு கடந்த 2023-ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. இதன்மூலம் இலியானா மற்றும் அவரது வாழ்க்கை துணைவர் மைக்கேல் டோலன் 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தங்கள் குழந்தைக்கு பெற்றோர் ஆனார்கள்.

நடிகை இலியானா தனது மகனின் புகைப்படங்களை அவ்வப்போது சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். அவர் தாய்மையை எவ்வளவு ரசிக்கிறார் என்பதை விளக்கும் சில கருத்துகளையும் பதிவு செய்வார். இந்நிலையில் நடிகை இலியானா மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக சில நாட்களாக திரையுலகில் கிசுகிசுக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் நடிகை இலியானா இரண்டாவது முறையாக வித்தியாசமான முறையில் கர்ப்பமாக இருப்பதாகக் கூறினார். அவர் அதை நேரடியாக உறுதிப்படுத்தாமல் சற்று வித்தியாசமான முறையில் உறுதிப்படுத்தினார். பிப்ரவரி 15ஆம் தேதியான நேற்று தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பஃப் கார்ன் தின்பண்டங்கள் மற்றும் ஆன்டாசிட் சூயிங்கம் பாக்கெட்டுகளுடன் இருக்கும் படத்தை நடிகை இலியானா வெளியிட்டிருந்தார்.

அதில், “நீங்க கர்ப்பமா இருக்கீங்கன்னு சொல்லாமல், நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்று சொல்ல வேண்டும்’’ என்று நடிகை இலியானா எழுதியிருந்தார். இதன்மூலம் நடிகை இலியானா தான் கர்ப்பமாக இருப்பதை மறைமுக வார்த்தை விளையாட்டுக்கள் மூலம் உறுதிப்படுத்தியிருக்கிறார்.