நான் நலமாக இருக்கின்றேன்: யோகி பாபு!

தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகராகவும் ஹீரோவாகவும் பிசியாக நடித்து வருகின்றார் யோகி பாபு. இவருக்கு நேற்று அதிகாலை விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வந்தன. ஆனால் இந்த தகவலில் எந்த உண்மையும் இல்லை. இதெல்லாம் வெறும் வதந்தி என யோகி பாபு தெரிவித்துள்ளார்

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருகின்றார் யோகி பாபு. தற்போது கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வருகின்றார். தற்போதைய சூழலில் மிகவும் பிஸியான நடிகர்களில் ஒருவராக இருக்கின்றார் யோகி பாபு. அவரின் கால்ஷீட் கிடைப்பதே தற்போது கஷ்டமாகிவிட்டதாம். அந்தளவிற்கு இரவு பகல் பாராமல் தொடர்ந்து நடித்து வருகின்றார் யோகி பாபு.

இவ்வாறு பிஸியான நடிகர்களில் ஒருவராக வலம் வரும் யோகி பாபுவிற்கு விபத்து ஏற்பட்டதாக ஒரு செய்தி பரவி வந்தது. நேற்று அதிகாலையில் வாலாஜாபேட்டை சுங்கச்சாவடியில் யோகி பாபு சென்ற கார் விபத்திற்கு உண்டானது. கார் கட்டுப்பாட்டை இழந்து சுங்கச்சாவடியில் இடித்து விபத்தை சந்தித்தது. யோகி பாபு எந்த காயங்களும் இன்றி உயிர் தப்பினார் என செய்தி வந்தது. இந்த செய்தியை கேள்விப்பட்ட ரசிகர்கள் பதறிப்போனார்கள். ஆனால் இந்த செய்தியில் எந்த உண்மையும் இல்லை. நான் நலமாக உள்ளேன் என யோகி பாபு ட்விட்டரில் தெரிவித்திருக்கின்றார். இதன் மூலம் இந்த செய்தி வதந்தி என தெரிய வந்தது. அதன் பிறகு தான் ரசிகர்களும் திரைபிரபலங்களும் நிம்மதி அடைந்தனர்.