மலையாள சினிமாவில் வாய்ப்பு கொடுக்காமல் ஒதுக்கினார்கள்: பார்வதி!

மலையாள நடிகை பார்வதி, தமிழில், பூ, மரியான், உத்தமவில்லன், தங்கலான் உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

சினிமாவில் பாலின சமத்துவம், பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து தொடர்ந்து பேசி வரும் இவர், மலையாள சினிமாவில் தனக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

அவர் அளித்துள்ள பேட்டியில், “மலையாள சினிமாவில் பெண்களுக்கான கூட்டமைப்பு உருவாவதற்கு முன், நான் தொடர்ந்து வாய்ப்புகளைப் பெற்றுவந்தேன். என்னைச் சுற்றி பலர் இருந்தார்கள். செல்ஃபி எடுத்துக்கொண்டார்கள். ஆனால், அந்த கூட்டமைப்பு உருவான பின், சர்ச்சைகள் எழுந்தன. அதற்குப் பிறகு வாய்ப்புகள் குறைய தொடங்கிவிட்டன.

என் குரலை ஒடுக்குவதற்கான வழியாக வாய்ப்புகளை வழங்காமல் இருந்தார்கள். வாய்ப்பு கொடுக்கா விட்டால் நான் அமைதியாகி விடுவேன் என நினைத்தார்கள்.என்னுடன் ஏற்கெனவே பணியாற்றியவர்களும் எனக்கு வாய்ப்பு வழங்கவில்லை. பிறகுதான் தன்னம்பிக்கை கொண்டவளாக மாறினேன்” என்று தெரிவித்துள்ளார்.