ஜோதிகாவின் வெப் தொடரான ‘டப்பா கார்டெல்’ வருகிற பிப்ரவரி 28ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. இதனை புரோமோட் செய்யும் வேலைகளில் ஜோதிகா பிசியாக சுற்றிக்கொண்டிருக்கிறார்.
அந்த புரோமோஷனின் ஒரு பகுதியில், ஜோதிகா பாலின வேறுபாடு குறித்து பேசி இருக்கிறார். இது குறித்து அவர் கூறியதாவது:-
இது எனக்கு அன்றாட விஷயமாக தெரிகிறது. நான் ஒரு சூப்பர் ஸ்டாரை திருமணம் செய்து கொண்டேன். அதன் காரணமாக அதனை நான் இப்போது வரை எதிர்கொண்டு வருகிறேன். இது நேர்காணல்களின் போது கூட நடக்கிறது. நான் சூர்யாவை கல்யாணம் செய்து கொண்டதால் அதிர்ஷ்டசாலியாக உணருகிறேன் என்று கூறினால், சூர்யா உண்மையில் மிகவும் நல்லவர் என்கிறார்கள். ஆனால், அவர் நல்லப்பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் அதிர்ஷ்டசாலியாக உணருகிறேன் என்று கூறினால், மனைவி குறித்து சூர்யா எப்படி நல்ல விதமாக யோசிக்கிறார் பாருங்கள் என்கிறார்கள். அது அங்கு மட்டுமல்ல, கார் போன்ற ஜட பொருள்களை வாங்கும் போது கூட பிரதிபலிக்கிறது.
ஆம், நான் ஒரு காரை வாங்கினால் கூட வேறொருவர் அதன் அம்சங்களை சரியாக இருக்கிறதா என்று சோதனை செய்கிறார். இது போன்ற 100 சம்பவங்களை என்னால் பட்டியலிட முடியும். இது தற்போது எனது தினசரி வாழ்க்கையாகி விட்டது. இது ஒரு கட்டத்தில் அடையாள நெருக்கடியை கூட கொடுக்கும். ஒரு பெண்ணின் அடையாளத்திற்கான தேடல் என்பது அவளின் முடிவுகள் மற்றும் தேர்வுகளை அவளே எடுப்பதுதான். அப்படித்தான் நான் என் வாழ்க்கைப் பாதையைத் தேர்ந்தெடுத்தேன். இவ்வாறு அவர் பேசினார்.