கிரிப்டோ கரன்சி மோசடி; நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வாலுக்கு சிக்கல்!

புதுச்சேரியில் நடந்த பல கோடி கிரிப்டோகரன்சி மோசடி தொடர்பாக பிரபல நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வால் ஆகியோரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால், அதிக லாபத்தை கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறி, புதுச்சேரியைச் சேர்ந்த 10 பேரிடம் சுமார் ரூ.2 கோடியே 40 லட்சம் ரொக்கம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்த முன்னாள் அரசு ஊழியர் அசோகன் என்பவர் புகார் கொடுத்துள்ளார். அவர் கொடுத்த புகார் சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து இணைய வழி காவல் துறை காவல் ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டார். இந்த விசாரணையில் மோசடி தொடர்பான விவரங்கள் வெளியாகியுள்ளது.

இந்த மோசடி கும்பல் கோயமுத்தூரை தலைமையிடமாக கொண்டு சினிமா நடிகை தமன்னா மற்றும் பல்வேறு சினிமா பிரபலங்கள் தொழிலதிபர்கள் கலந்து கொண்டு மிக பிரம்மாண்டமாக 2022இல் துவக்க விழாவை நடத்தியுள்னர். மூன்று மாதங்களுக்கு பிறகு நடிகை காஜல் அகர்வாலை வைத்து மகாபலிபுரத்தில் உள்ள சொகுசு ஹோட்டலில் 100 நபர்களுக்கு ஒரு கோடி ரூபாய் முதல் 10 லட்ச ரூபாய் இருக்கின்ற கார்களை அவர்கள் முதலீடு செய்ததற்கு ஏற்ப பரிசாக வழங்கியுள்ளனர். மும்பையில் கப்பலில் மிகப்பெரிய விழாவை ஏற்பாடு செய்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட அந்த விழாவை பயன்படுத்தி பொதுமக்களிடமிருந்து நிதியை திரட்டியது தெரியவந்தது

புதுச்சேரி சேர்ந்தவர்களுக்கு மட்டும் 3.4 கோடி அளவிற்கு நஷ்டம் ஏற்படுத்தி சம்பந்தமாக புகார் அளித்துள்ளனர். மோசடி கும்பல் மீது டெல்லி, ஒரிசா, மகாராஷ்டிரா, மும்பை, கோயமுத்தூர், பெங்களூர், பாண்டிச்சேரி, ஆந்திர பிரதேஷ், கேரளா, விழுப்புரம், திருப்பூர் போன்ற இடங்களில் வழக்குப்பதிவு செய்ததும், இணைய வழி மோசடிக்காரர்களுக்கு அக்கவுண்டை வாங்கி கொடுத்து பல கோடி ரூபாய் பணத்தை மோசடிக்காரர்கள் திருட இவர்கள் உடந்தையாக இருந்ததும் இரண்டு வழக்குகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

கோயம்புத்தூர் மோசடி கும்பல் ஈடுபட்டிருப்பதும் அவர்கள் மீது புதுச்சேரியில் ஏற்கனவே ஒரு வழக்கு இருப்பதும் தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதே வழக்கு சம்பந்தமாக மேற்படி குற்றவாளிகள் இம்ரான் பாஷா ராய்ப்பூர் காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்டு இருப்பதும் விசாரணையில் தெரிய வருகிறது. தனிப் படை போலீசார், கோயமுத்தூரில் வைத்து நித்தீஷ் ஜெயின் மற்றும் அரவிந்த் என்ற இரண்டு நபர்களை கைது செய்து தலைமறைவாக உள்ள நபர்களை தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், கிரிப்டோகரன்சி மோசடிதொடர்பாக பிரபல நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வால் ஆகியோரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். துவக்க விழா மற்றும் நிறுவன நிகழ்ச்சியில் பங்கேற்று விளம்பரப்படுத்தியதால், இருவரும் பங்குதாரர்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.