நடிகை ஜோதிகா இணையத் தொடர் ஒன்றில் புகைப்பிடிக்கும் காட்சியில் நடித்துள்ளார்.
நடிகை ஜோதிகா மீண்டும் சினிமாவில் தீவிரமாக நடித்து வருகிறார். இறுதியாக, தமிழில் உடன் பிறப்பே படத்தில் நடித்தவர், அடுத்ததாக மலையாளத்தில் மம்மூட்டியுடன் காதல் தி கோர் படத்தில் நடித்து வரவேற்பைப் பெற்றார். பின், ஹிந்தியில் ஸ்ரீகாந்த் மற்றும் சைத்தான் ஆகிய படங்களில் நடித்தவர் தற்போது பாலிவுட் சினிமா மற்றும் இணையத் தொடர்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
தற்போது, டப்பா கார்டெல் (dabba cartel) என்கிற இணையத் தொடரில் நடித்து முடித்துள்ளார். நெட்பிளிக்ஸில் கடந்த பிப். 28 ஆம் தேதி வெளியான இத்தொடர் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது.
அதேநேரம், இத்தொடரில் நடிகை ஜோதிகா சிகரெட் பிடிக்கும் காட்சி ஒன்று இடம்பெற்றுள்ளது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இதுகுறித்து கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.