நடிகை ராஷ்மிகா மந்தனா, தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார். கர்நாடகாவை சேர்ந்த ராஷ்மிகா மந்தனா, பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவுக்கு கடந்த ஆண்டு வர மறுத்துவிட்டதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரவி கனிகா கூறியுள்ளார்.
தனது வீடு ஹைதராபாத்தில் உள்ளதாகவும், கர்நாடகா எங்கிருக்கிறது என தெரியாது என்று ராஷ்மிகா கூறியதாகவும் தெரிவித்துள்ள அவர், கன்னட திரைப்படத் துறையில் தனது வாழ்க்கையைத் தொடங்கினாலும், கர்நாடகாவையும் கன்னட மொழியையும் புறக்கணித்த ராஷ்மிகாவுக்கு பாடம் புகட்ட வேண்டாமா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதற்கு ராஷ்மிகா தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. அவரை யாரும் அழைக்கவில்லை என்றும் அவர் பற்றி கூறப்படும் அனைத்தும் பொய்யானவை என்றும் அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.