நடிகை மீனாட்சி சவுத்ரியை ஆந்திரப் பிரதேச அரசு பிராண்ட் அம்பாசிடராக நியமித்ததாக தகவல் வெளியானது.
தமிழில் விஜய் ஆண்டனியின் ‘கொலை’ படம் மூலம் அறிமுகமானவர் மீனாட்சி சவுத்ரி. அதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு பல படங்களில் இவர் நடித்திருந்தார். அதன்படி, ஆர்.ஜே.பாலாஜியின் ‘சிங்கப்பூர் சலூன்’ விஜய்யின் ‘தி கோட்’, துல்கர் சல்மானுடன் லக்கி பாஸ்கர் , வருன் தேஜுடன் மட்கா ஆகிய படங்களில் நடித்து பாராட்டை பெற்றார். சமீபத்தில் வெங்கடேஷுடன் ‘சங்கராந்திகி வஸ்துன்னம் ‘படத்தில் நடித்திருந்தார். இப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது.
இவ்வாறு முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை மீனாட்சி சவுத்ரியை ஆந்திரப் பிரதேச அரசு பிராண்ட் அம்பாசிடராக நியமித்ததாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், வெளியான செய்திகளை ஆந்திர அரசு மறுத்துள்ளது. இது குறித்து அம்மாநிலத்தின் உண்மை சரிபார்ப்பு பிரிவு வெளியிட்டுள்ள தகவலில் அரசின் பெயரில் வேண்டுமென்றே இதுபோன்ற பொய்யான பதிவுகளை வெளியிடுவோர் மீதும், பொய்யான பிரசாரம் செய்பவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.