‘டிராகன்’ பார்த்துவிட்டு படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டி இருக்கிறார் ரஜினி.
பிப்.21-ம் தேதி வெளியான படம் ‘டிராகன்’. உலகமெங்கும் மொத்த வசூலில் ரூ.100 கோடியை கடந்து மாபெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. 2025-ம் ஆண்டில் தமிழகத்தில் முதல் மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் என்று பலரும் குறிப்பிட்டுள்ளனர். தற்போது இப்படத்தினை பார்த்துவிட்டு ரஜினியும் பாராட்டு தெரிவித்திருக்கிறார்.
ரஜினியை நேரில் சந்தித்தது குறித்து இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, “என்ன ஓர் அருமையான எழுத்து. அற்புதம்.. அற்புதம் என்று ரஜினி சார் கூறினார். நல்ல படம் பண்ணனும், படத்தை பார்த்துவிட்டு ரஜினி சார் வீட்டுக்கு கூப்பிட்டு வாழ்த்தி நம்ம படத்தைப் பற்றி பேசணும். இது இயக்குநர் ஆக வேண்டும் என்று கஷ்டப்பட்டு உழைக்கிற ஒவ்வொரு உதவி இயக்குநரின் கனவு. கனவு நிறைவேறிய நாள் இன்று” என்று தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் மூவருமே ரஜினியை சந்தித்திருக்கிறார்கள்.