இணையம் நன்றாக வளர்ந்த பின்னர் பலரும் தாங்கள் பிரபலம் ஆக வேண்டும் என பல சர்ச்சைக்குரிய காரியங்களைச் செய்து மக்கள் மத்தியில் குறிப்பாக இணையவாசிகள் மத்தியில் பிரபலமடைந்தார்கள். ஆனால் இவர்களின் சர்ச்சைகள் எப்பாவது வரும் அதன் பின்னர் அவர்கள் அமைதியாகிவிடுவார்கள். ஆனால், நடிகை மீரா மிதுன் அப்படி இல்லை. அவர் எப்போதும் சர்ச்சையும் முழு உருவமாக வலம் வந்து கொண்டிருந்தார். இப்படியான மீரா மிதுனின் பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
மாடல் அழகியாக தனது கெரியரை தொடங்கிய மீரா மிதுன், அதன் பின்னர் நடிக்க ஆசைப்பட்டார். அதற்கான முயற்சிகளில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். இப்படி இருக்கும்போது பிக் பாஸில் கலந்து கொண்ட மீரா மிதுன் அங்குதான் தான் சர்ச்சையின் முழு உருவம் என மக்களுக்கு காட்டினார். காரணம், கோடிக்கணக்கான மக்கள் பார்த்துக் கொண்டு இருந்த நிகழ்ச்சியில் இயக்குநர் சேரன் தனது இடுப்பில் கை வைத்தார் என்ற குண்டைத் தூக்கிப் போட்டார். இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. சேரனை முழுவதும் நிலைகுலைய வைத்தது. பிக் பாஸில் இருந்து வெளியே வந்த பின்னர் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பினார் மீரா மிதுன். தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தொடர்ந்து ஏதாவது சர்ச்சைக்குரிய செய்திகளை பகிர்ந்து வந்தார். குறிப்பாக பட்டியலின இயக்குநர்கள் குறித்து மோசமாக விமர்சித்தார். இதனால் இவர் மீது வழக்குகள் தொடர்ந்து பதிவாகிக் கொண்டு இருந்தது. ஒரு கட்டத்தில் அவரை காவல்துறையினர் கைது செய்தார்கள். புழல் சிறையில் அடைக்கப்பட்ட மீரா மிதுன் அதன் பின்னர், ஜாமீனில் வெளியே வந்தார்.
இப்படியான நிலையில் இணையத்தில் தற்போது மீரா மிதுன் பேசி வெளியிட்ட பழைய வீடியோ ஒன்று உலா வருகிறது. அதில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா மறைவு குறித்து அதிமுக குறித்து பேசியுள்ளார். அதாவது, அந்த வீடியோவில், “ஜெயலலிதா அம்மா மறைவுக்குப் பின்னர் மத்திய அரசு என்னைத்தான் முதலமைச்சராக சொன்னார்கள். ஆனால் நான் தான், முதலமைச்சராக ஆகிவிட்டால் ஒரு கட்டத்திற்குள் இருப்பதைப்போல் ஆகிவிடும். மக்களோடு மக்களாக இருக்க முடியாது என முடிவு செய்து, கடசியில் இருந்த மற்றொருவரை சிபாரிசு செய்து முதலமைச்சர் ஆக்கினேன். இது எனக்கும் தெரியும் அவர்களுக்கும் (அதிமுகவினர்) தெரியும். ஆனால், நான் அமைதியாக இருக்க காரணம், அவர்கள் இந்த விஷயத்தை வெளியே சொல்ல வேண்டும் என்பதுதான். நான் செய்த தவறு நான் அப்போது முதலமைச்சர் ஆகியிருக்க வேண்டும்” என பேசியுள்ளார்.
மீரா மிதுன் இவ்வாறு பேசியுள்ள வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும் இவரது இந்த பேச்சுக்கு கமெண்ட்கள் குவிந்த வண்ணம் உள்ளது. மீரா மிதுனுக்கு என்ன மனநிலை சரியில்லையா என்றெல்லாம் கமெண்ட் அடித்து வருகிறார்கள். சிலர் என்னங்க அதிமுகவுக்கு வந்த சோதனை எனவும் கமெண்ட் அடித்து வருகிறார்கள். இந்த வீடியோ இப்போது தீயாக பரவி வருகிறது. இது அதிமுகவினருக்கு அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.