70 கோடி பார்வைகளைக் கடந்த அரபிக் குத்து பாடல்!

அரபிக் குத்து பாடல் யூடியூப்பில் 70 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.

நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனால் இயக்குநர் நெல்சன் ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். பீஸ்ட் படம் ரசிகர்களைக் கவரவில்லை என்றாலும், அனிருத்தின் பாடல்கள் அனைத்தும் பெரியளவில் வெற்றியைப் பெற்றன. குறிப்பாக, அரபிக் குத்து உலக அளவில் பிரபலமானது.

இந்திய அளவில் பிரபலங்கள் பலரும் அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடி விடியோ பகிர்ந்தனர். சில கிரிக்கெட் வீரர்களும் அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடிய விடியோக்களும் வைரலாகின. அரபிக் குத்து பாடலை சிவகார்த்திகேயன் எழுத, அனிருத் மற்றும் ஜோனிதா காந்தி இருவரும் இணைந்து பாடியிருந்தனர். ஜானி மாஸ்டர் நடன இயக்குநராக பணியாற்றியிருந்தார்.

இந்த நிலையில், இப்பாடல் யூடியூப்பில் 700 மில்லியன் (70 கோடி) பார்வைகளைக் கடந்து அசத்தியுள்ளது.