யஷ் நடிக்கும் ‘டாக்சிக்’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

2026-ல் மார்ச் 19-ம் தேதி ‘டாக்சிக்’ வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

யஷ் நடித்து வரும் ‘டாக்சிக்’ திரைப்படம் இன்னும் படப்பிடிப்பு முடிவடையாத காரணத்தினால் எப்போது வெளியீடு என்பது தெரியாமல் இருந்தது. தற்போது அடுத்த ஆண்டு மார்ச் 19-ம் தேதி ‘டாக்சிக்’ வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தினக் கே.வி.என் நிறுவனம் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது.

மார்ச் 19-ம் தேதி சமயத்தில் 4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் இந்த தேதியினை படக்குழு தேர்ந்தெடுத்துள்ளது. கன்னடம் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் ‘டாக்சிக்’ படமாக்கப்பட்டு வருகிறது. இப்படி படமாக்கப்பட்டு வரும் முதல் இந்திய திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய மற்றும் சர்வதேச சினிமாவின் திறமையான கலைஞர்கள் இப்படத்தில் ஒருசேர பணிபுரிந்து வருகின்றனர். மேலும், இந்தப் படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்படவுள்ளது.

‘டாக்சிக்’ படத்தினை கீது மோகன்தாஸ் இயக்கி வருகிறார். இதில் நயன்தாரா, கைரா அத்வானி உள்ளிட்ட பலர் யஷ் உடன் நடித்து வருகிறார்கள்.