ஆஸ்கரில் இந்தியா தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக நடிகை தீபிகா படுகோன் குற்றம் சாட்டி உள்ளார்.
2023-ம் ஆண்டு ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் தொகுப்பாளராகக் கலந்துகொண்ட நடிகை தீபிகா படுகோன், சமீபத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில் அந்த விருது குறித்துக் கூறியுள்ளார். அதில், “இந்தியா பலமுறை ஆஸ்கர் விருதை இழந்துள்ளது. தகுதியான பல இந்திய படங்களும் திறமைகளும் ஆஸ்கரில் புறக்கணிக்கப்பட்டதாக நினைக்கிறேன். ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு விருதை அறிவித்தபோது, பார்வையாளராக நான் உணர்ச்சிவசப்பட்டேன். இந்தியர் என்பதைத் தவிர, அந்தப் படத்துடன் எனக்கு வேறு எந்த தொடர்பும் இல்லை. ஆனால் அந்தத் தருணம், மிகவும் உயர்ந்தது. தனிப்பட்ட முறையில் அதை பெருமையாக உணர்ந்தேன்” என்று தெரிவித்துள்ளார்.