அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள வீர தீர சூரன் 2 நாளை உலகமெங்கும் ரிலீஸ் ஆகிறது. படம் பார்க்க வரும் ரசிகர்கள் முதல் 20 நிமிடத்தை மிஸ் பண்ணாதீங்க என்று இயக்குநர் தெரிவித்திருந்தார். இப்படம் தூள், சாமி படத்தை பார்த்த பீல் வரும் என எஸ்.ஜே.சூர்ய தெரிவித்திருவ்தார். இதனால், இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில், விக்ரம் படத்தை காண காத்திருக்கும் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகியிருக்கிறது. இப்படம் வெளியாவதில் சிக்கல் என கூறப்படுகிறது.
மதுரையை பின்னணியாக கொண்டு தரமான கேங்ஸ்டர் படமாக வீர தீர சூரன் உருவாகியிருக்கிறது. இப்படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்திருக்கிறார். எஸ்.ஜே.சூர்யா, சுராஜ், சித்திக் போன்றோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒரு இரவில் நடக்கும் பக்கா ஆக்சன் படமாக வீர தீர சூரன் உருவாகியிருக்கிறது. படத்தின் டிரெய்லரில் போலீசுக்கே பயம் காட்டும் கேங்ஸ்டராக விக்ரம் இருக்கிறார். ரசிகர்களை பாேன்றே இயக்குநர் அருண்குமார், விக்ரம், துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்ய ஆகியாேர் திரையில் ரசிகர்களின் ரெஸ்பான்ஸை காண காத்திருக்கின்றனர்.
கடந்த சில வருடங்களாக விக்ரமிற்கு சரியான வெற்றிப்படங்கள் ஏதும் அமையவில்லை. வீர தீர சூரன் படம் ஹிட் அடிக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். மேலும், படக்குழுவினரும் ஊர் ஊராக சென்று பட புரோமோஷன் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர். ஆனால், வீர தீர சூரன் 2 வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இப்படத்திற்கு மும்பையை சேர்ந்த B4U என்ற தயாரிப்பு நிறுவனமும் பண முதலீடு செய்திருக்கிறது. இதனால், இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை தயாரிப்பாளர் அந்த நிறுவனத்த்திற்கு எழுதி கொடுத்துவிட்டாராம். ஆனால் அக்ரிமெண்டில் உள்ளபடி இன்னும் படம் ஓடிடி உரிமை விற்கப்படவில்லை. அதற்குள் படக்குழு ரிலீஸ் தேதியை அறிவித்து, ரிலீசுக்கும் தயாராகிவிட்டது. இந்த நேரத்தில் ரிலீஸ் தேதியை அறிவித்ததால் ஓடிடியில் விற்க முடியவில்லை. இப்படத்திற்கு முதலீடு செய்த தொகையில் 50% தங்களுக்கு நஷ்டம் என B4U நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் தெரிவித்திருக்கிறது. ஆனால், இந்நிறுவனம் தொடர்ந்த வழக்கை டெல்லி நீதிமன்றம் ஒத்தி வைத்திருக்கிறது. நாளை காலை 10.30 வரை வீர தீர சூரன் படத்தை வெளியிடக்கூடாது என இடைக்கால உத்தரவையும் நீதிமன்றம் பிறப்பித்திருப்பதால் பெரும் சிக்கல் எழுந்திருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே இதேபோன்று விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் படமும் இதே தலைவலியை சந்தித்தது. தயாரிப்பு நிறுவனத்தால் இப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு பின்பு வெளியானது. துருவ நட்சத்திரம்: விக்ரம் நடிப்பில் நீண்ட நாள் கிடப்பில் இருக்கும் துருவ நட்சத்திரம் இதே பிரச்னையை சந்தித்து வருகிறது. நாளை வீர தீர சூரன் வெளியாகுமா அல்லது ரிலீஸ் தேதி மாற்றப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.