பல்வேறு தளங்களில் பணிபுரிந்து வந்த சிவாங்கி தற்போது நிகழ்ச்சி தொகுப்பாளராக மாறியிருக்கிறார்.
விஜய் தொலைக்காட்சி மூலம் பிரபலமானவர்களில் முக்கியமானவர் சிவாங்கி. சூப்பர் சிங்கரில் போட்டியாளராக பங்கெடுத்து பிரபலமாகி, பின்பு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கெடுத்தார். அதில் மேலும் பிரபலமானார். பின்பு அதே நிகழ்ச்சியில் குக் ஆகவும் பங்கெடுத்து அனைவரது பாராட்டையும் பெற்றார்.
இப்படி பல தளங்களில் பணிபுரிந்தவர், தற்போது சன் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக மாறியிருக்கிறார். ‘நானும் ரவுடி தான்’ என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளர் சிவாங்கிதான். இதனை தனது எக்ஸ் தளத்தில் உறுதிப்படுத்தி இருக்கிறார். இந்த புதிய தொடக்கத்திற்கு உங்களது ஆதரவு தேவை என வேண்டுகோள் விடுத்துள்ளார்.