திரிஷாவுடனான புகைப்படத்தைப் பகிர்ந்து ஜோதிகா பதிவு வைரல்!

நடிகர் சூர்யாவும் அவரது மனைவி ஜோதிகாவும் தங்கள் வீட்டில் சினிமா ஹீரோயின்களுக்கு விருந்து வைத்துள்ளனர். அப்போது எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

ஜோதிகா 1997-ல் வெளியான டோலி சஜா கே ரஹ்னா என்ற இந்தி படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தமிழில் 1999-ல் நடித்த வாலி படம் வெற்றி பெற்றதால் தொடர்ந்து தமிழ் படங்களிலேயே நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இவர் கடந்த 2006-ம் ஆண்டு நடிகர் சூர்யாவை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு தியா என்ற மகளும் தேவ் என்ற மகனும் உள்ளனர். நடிகை ஜோதிகா- சூர்யா திருமணமாகி கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆக உள்ள நிலையில், இன்றளவும் இருவரும் குறையாத காதலுடன் வாழ்ந்து வருகிறார்கள். இந்த ஜோடி பலருக்கு ரோல்மாடலாகவும் இருக்கிறார்கள்.

இந்நிலையில், இவர்கள் இருவரும் சேர்ந்து கோலிவுட் நடிகைகளுக்கு பார்ட்டி வைத்துள்ளனர். இந்த விருந்தில் நடிகை திரிஷா, ரம்யா கிருஷ்ணன், ராதிகா சரத்குமார், நடன இயக்குநர் பிருந்தா, தொகுப்பாளர்கள் டிடி மற்றும் ரம்யா ஆகியோர் பங்கேற்றிருக்கிறார்கள்.இங்கு இவர்கள் அனைவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜோதிகா தனது நண்பர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து அவர்களைப் பற்றியும், அவர்களை சந்திப்பதைக் குறித்தும் குறிப்பிட்டிருக்கிறார்.

இதில் திரிஷாவுடன் முன்பு எடுத்த புகைப்படத்தையும் இப்போது எடுத்த புகைப்படத்தையும் இணைத்து பதிவிட்டது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர், ”நேரம் பறந்து கொண்டிருக்கிறது. அது உங்களை உயரத்திற்குக் கூட்டிச்செல்கிறது.” என குறிப்பிட்டிருக்கிறார்.

நடன இயக்குநர் பிருந்தாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்து , ”இந்தப் பெண் அவரின் விரல்களால் எங்களை நடனமாட வைத்தவர்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இறுதியாக தன் நண்பர்கள் அனைவருடனும் எடுத்துக்கொண்ட குழுப் புகைப்படத்தைப் பகிர்ந்து, ”இதைதான் நான் தெரபி என்று அழைப்பேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.