ஒரு முறை அணிந்த உடையை மீண்டும் போடுவதில்லை என்று தீர்க்கமாக இருந்தேன் என்று நடிகை சினேகா கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகில் 2000ஆம் ஆண்டு என்னவளே படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் சினேகா. இதைத்தொடர்ந்து பிரசாந்துடன் விரும்புகிறேன் என்ற படத்தில் நடித்தார். அதைத்தொடர்ந்து எவர்க்ரீன் ஹிட் பாடல் மூலம் அறியப்பட்டார் சினேகா. ஆனந்தம் படத்தில் இடம்பெற்ற பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் பாடல் மூலம் பிரபலமடைந்தார். ஆனந்தம் படத்தில் அப்பாஸ்க்கு ஜோடியாக நடித்தார். இப்படம் கொடுத்த வெற்றிக்கு பின் விஜய், சூர்யா, அஜித், தனுஷ் என டாப் ஹீரோக்கள் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வளர்ந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் கலக்கி கொண்டிருந்த சினேகா பீக்கில் இருந்தார். இந்த சமயத்தில் தெலுங்கு நடிகரை காதலிபபதாகவும் கிசுகிசுக்கப்பட்டது.
இந்நிலையில், நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகளும் இருக்கின்றனர். திருமணம் குடும்ப உறவில் இருந்தாலும், நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கடந்தாண்டு வெளியான கோட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தில் அவரது நடிப்பு பாராட்டும் வகையில் இருந்தன. சினேகாவை அனைவரும் புன்னகை அரசி என்றே செல்லமாக ரசிகர்கள் அழைப்பார்கள். அந்த இளமையும் அழகும் மாறாமல் இன்றைக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் வலம் வருகிறார் சினேகா. ஒரு பெண் சினிமாவில் உயர்ந்த நிலையை அடைய பல சோதனை கட்டத்தை தாண்டி வர வேண்டியிருக்கிறது. இதில் பெண்களுக்கு நிகழும் அநீீதிகளை சொல்லி தெரிந்துகொள்ள வேண்டியதில்லை. ஆனால், சமீபத்தில் சினேகா அளித்த பேட்டியில் தெரிவித்த விசயம் கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சினேகா அளித்த பேட்டியில், நான் எப்போதும் ஒருமுறை அணிந்த உடையை மீண்டும் அணிவதில்லை. அதற்கு காரணம் இருக்கிறது. ஒருமுறை படப்பிடிப்பின் போது அணிந்த உடையை ஒரு நிகழ்ச்சிக்கு அணிந்து சென்றேன். இதை பார்த்த சிலர் என்னிடம் டிரஸ் இல்லை. அதனால், ஒரே ஆடையை திரும்ப திரும்ப அணிந்து வருவதாக கமெண்ட் அடித்தனர். இதுகுறித்த செய்தி கிசுகிசுவாகவும் வந்தது. இது என்னை மனதளவில் ரொம்ப பாதிப்பை தந்தது. ஒரு நடிகை என்பதை தாண்டி பெண்ணாக மிகவும் வறுத்தம் அடைந்தேன். அந்த நிமிடம் முதல் ஒரு முடிவெடுத்தேன். ஒரு முறை அணிந்த உடையை மீண்டும் போடுவதில்லை என்று தீர்க்கமாக இருந்தேன். ஆனால், நான் எடுக்கும் ஆடைகள் அனைத்தும் விலையுயர்ந்தது தான். ஒருமுறை அணிந்த பின்பு போடமாட்டேன். அந்த ஆடையை தேவைப்படும் நபர்களுக்கு அல்லது உதவி கேட்டு வருபவர்களுக்கு கொடுத்து விடுவேன் என சினேகா கூறியுள்ளார்.