‘க்ரிஷ் 4’ படத்தின் நாயகியாக பிரியங்கா சோப்ரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
‘க்ரிஷ் 4’ படத்தின் முதற்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது இதன் நாயகியாக பிரியங்கா சோப்ரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘க்ரிஷ்’ மற்றும் ‘க்ரிஷ் 3’ ஆகிய படங்களில் ஹ்ரித்திக் ரோஷனுக்கு நாயகியாக பிரியங்கா சோப்ரா தான் நடித்திருந்தார். தற்போது ‘க்ரிஷ் 4’ படத்திலும் நாயகி கதாபாத்திரத்தில் ப்ரியாங்காவே நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
‘க்ரிஷ் 4’ படத்தில் நாயகனாக நடித்து, இயக்கவும் உள்ளார் ஹ்ரித்திக் ரோஷன். ராகேஷ் ரோஷன் மற்றும் யஷ் ராஜ் பிலிம்ஸ் ஆகியோர் இணைந்து இதனை தயாரிக்கவுள்ளார். தற்போது இதன் நடிகர்கள் ஒப்பந்தம் மும்முரமாக தொடங்கப்பட்டுள்ளது. ஹாலிவுட் நிறுவனங்களுடன் கிராபிக்ஸ் பணிகளுக்கான வேலைகளுக்கும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.