நடிகர் ஸ்ரீயின் பரிதாப நிலைக்கு காரணம் இதுதானா?

விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியலின் மூலம் பிரபலமடைந்த நடிகர் ஸ்ரீ, வில்லம்பு, மாநகரம், ஓநாயும் ஆட்டுக்குட்டியும் போன்ற பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். ஆனால் அவருடைய தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. இந்த நிலையில் அவருடைய பரிதாப நிலைக்கு காரணம் என்ன என்பது குறித்து தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ஸ்ரீராம் நடராஜன் என்ற தன்னுடைய பெயரை சினிமாவிற்காக தான் ஸ்ரீ என்று மாற்றி இருக்கிறார். இவர் கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் 90ஸ் ஹிட்ஸ்களில் ஃபேவரிட் நடிகராக வலம் வந்தார். அந்த சீரியல் மூலமாக ஒரு சிலருக்கு தான் சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. அதில் ஸ்ரீயும் ஒருவர் கனா காணும் காலங்கள் சீரியலைத் தொடர்ந்து அவருக்கு வழக்கு எண் 18 என்ற திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த திரைப்படத்தில் அவருடைய வித்தியாசமான நடிப்பு மற்றும் பாவமான முகம் பலரையும் கவர்ந்து விட்டது. ஸ்ரீ நடித்த திரைப்படங்கள் முதல் படத்தில் ஐயோ பாவம் என்று சொல்ல வைத்த ஸ்ரீ அடுத்த திரைப்படத்தில் மிரட்டலாக நடித்திருந்தார். ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று போற்ற பல திரைப்படத்தை நடித்திருந்தார்.

அதுபோல பிக் பாஸ் தமிழ் சீசன் 1 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டார். ஆனால் நான்காவது நாளிலேயே நிகழ்ச்சியில் இருந்து விலகி விட்டார். ஆனால் சில வருடங்களாக எந்த திரைப்படங்களிலும் காணவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஸ்ரீயின் சோசியல் மீடியா அக்கவுண்டில் அவருடைய புகைப்படம் மற்றும் ரிங்ஸ் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதற்கு பிறகு சோசியல் மீடியாவில் இந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவருக்கா இந்த நிலைமை? இவருக்கு என்ன ஆச்சு என்று பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் ஸ்ரீ யின் இந்த பரிதாப நிலை குறித்து அவருடைய உறவினர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் இருந்து விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

ஸ்ரீயின் நிலைமைக்கு காரணம் என்று அதில் அவர் கூறும்போது, “ஸ்ரீ என்னுடைய ரிலேட்டிவ் அண்ணா தான். அவர் நடிச்ச படத்திற்கு அவருக்கு பணத்தை கொடுக்கவில்லை. இதனால் அவர் ரொம்ப டிப்ரசனில் இருந்தார். அப்போது குடும்பத்திலும் பிரச்சினை ஏற்பட்டது. அதனால் அவர் தனியாக போய்விட்டார். இப்போ எங்கேயோ இருக்காரு. ஆனா குடும்பத்தினர் எல்லோரும் கூப்பிட்டும் வரமாட்டேங்கிறாரு. புகைப்படங்கள் வெளியாகும் ஐடி அவருடைய ரியல் ஐடி தானா என்பது பலருக்கு சந்தேகம் இருக்கும் நிலையில் அது அவருடைய ரியல் ஐடி தான் லைஃப்ல நிறைய நடிச்சும் அவருக்கு பணம் கிடைக்கவில்லை, நிறைய பேரு அவரை ஏமாத்திட்டாங்க. அதனால இப்போ எல்லாரையும் விட்டுட்டு சிங்கிளா இருக்கிறார்” என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.

கடந்த ஒரு வருடங்களாக ஸ்ரீ ஒரே வீட்டிற்குள் ஒரு அறைக்குள் தானே சமைத்து சாப்பிடுவது போன்று புகைப்படங்கள் மற்றும் ரிலீஸ் வீடியோக்கள் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். ஒரு சில உடைகளை மட்டுமே மீண்டும் மீண்டும் போட்டுக்கொண்டு அவர் ரிலீஸ் எடுத்திருக்கிறார். அதுபோல சில நாட்களாக அவர் போடும் போஸ்ட்டுகள் ஆபாசமாக இருக்கிறது. அந்த போஸ்டர்களுக்கு கீழே லேடி பாய் என்று டேக் செய்திருக்கிறார். இது ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

இந்நிலையில் ஸ்ரீயின் சோசியல் மீடியா பக்கத்தில் அதிகமான ரசிகர்கள் இயக்குனர் லோகேஷ் இதற்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் வைத்து வருகிறார்கள். இயக்குனர் லோகேஷ் முதல் முறையாக இயக்கிய மாநகரம் திரைப்படத்தில் ஸ்ரீ தான் கதாநாயகனாக நடித்திருந்தார். அந்த நேரத்தில் ப்ரோமோஷனில் கூட ஸ்ரீ லோகேஷ் குறித்து பெருமையாக பேசி இருப்பார். அதனால் ஸ்ரீயின் இந்த நிலைமைக்கு லொகேஷ் ஏதாவது ஆலோசனைகள் மற்றும் உதவிகள் செய்ய வேண்டும், ஸ்ரீயை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டுகோள் வைத்து இருக்கிறார்கள். சில வருடங்களாகவே சரியான வாய்ப்புகளும் தான் உழைத்ததற்கு சரியான பணமும் கிடைக்காததால் மன அழுத்தத்தில் போதை பழக்கத்திற்கு அடிமையாகி இவர் இப்படி மாறிவிட்டாரா? என்று ரசிகர்கள் தங்களுடைய வருத்தங்களை தெரிவித்து வருகிறார்கள்.