2021ம் ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படத்தின் மூலம் ரஜிஷா விஜயன் தமிழ் சினிமாவிலும் காலடி எடுத்து வைத்தார். ஜெய்பீம் மற்றும் சர்தார் உள்ளிட்ட படங்களில் நடித்த ரஜிஷா விஜயன் தெலுங்கில் ராமராவ் ஆன் ட்யூட்டி படத்தில் நடித்து டோலிவுட்டிலும் அறிமுகமானார். தான் சற்று பருமனாக இருப்பதாக நினைத்து ஃபீல் பண்ணி வந்த ரஜிஷா விஜயன் கடந்த ஆண்டு உடற்பயிற்சியின் மூலம் உடல் எடையை குறைக்க முடிவெடுத்து ஒரு வருடத்தில் நல்ல ரிசல்ட் கிடைத்திருப்பதாக தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மலையாள திரையுலகில் இருந்து தமிழ் சினிமாவுக்கு பல நல்ல திறமையான நடிகைகள் வந்து கொண்டிருக்கின்றனர். அதில், ரஜிஷா விஜயனும் தனது நடிப்புத் திறமையால் ஏகப்பட்ட ர்சிகர்களின் மனங்களை கவர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் உடன் இணைந்து கர்ணன் படத்தில் அறிமுகமான ரஜிஷா விஜயன் துருவ் விக்ரமை வைத்து மாரி செல்வராஜ் இயக்கி வரும் பைசன் படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும், சர்தார் படத்தைத் தொடர்ந்து சர்தார் 2 படத்திலும் அப்பா கார்த்திக்கு இவர் தான் ஜோடி. ராஷி கன்னா, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் சர்தார் 2 படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு அடுத்தடுத்து தமிழில் 2 பெரிய படங்கள் ரஜிஷா விஜயன் ரசிகர்களுக்காக வரப்போகின்றன. சர்
திடீரென தனது உடல் எடையை கட்டுக்கோப்பாக வைக்க இப்படியொரு டிரான்ஸ்பர்மேஷனை ரஜிஷா விஜயன் செய்ய முக்கிய காரணமே சர்தார் 2 படத்தில் நடிக்கத்தானா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். பைசன் படத்திலும் இவருக்கு என்ன மாதிரியான கதாபாத்திரத்தை மாரி செல்வராஜ் கொடுத்துள்ளார் என்பதை அறிந்து கொள்ளவும் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
வெயிட் லிப்டிங்கை தூக்கிக் கொண்டு கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் போஸ்ட்டில் ஷேர் செய்துள்ளார் ரஜிஷா விஜயன். மேலும், ஒரு வருடத்தில் சுமார் 15 கிலோ வரை எடையை தான் குறைத்ததாகவும் அவர் கூறியிருப்பது ஃபிட்னஸ் பிரியர்களுக்கும் இளைஞர்களுக்கும் நல்ல மோடிவேட் செய்யும் பதிவாக மாறியிருக்கிறது. ரஜிஷா விஜயன் காலில் ஏற்பட்டுள்ள காயங்களையும் புகைப்படத் தொகுப்பாக எடுத்து பதிவிட்டுள்ள நிலையில், வலி தான் வெற்றியின் ரகசியம் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
வரும் மே 16ம் தேதி துருவ் விக்ரம், ரஜிஷா சஜயன் நடிப்பில் உருவாகியுள்ள பைசன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றன. அதனை தொடர்ந்து இந்த ஆண்டு தீபாவளிக்கு கார்த்தியின் சர்தார் 2 வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு படங்களுமே மிகப்பெரிய வெற்றியை பெறும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.