விஜய் டிவி பிரியங்காவுக்கு இன்று அதாவது ஏப்ரல் 16ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார் என்ற தகவல் உலா வருகிறது.
விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. கடந்த சில ஆண்டுகளாகவே இவர் விஜய் டிவியில் மிகவும் முக்கியமான ஆங்கராக மாறியுள்ளார். விஜய் டிவி மட்டும் இல்லாமல், பல திரைப்படங்களின் புரோமோஷன்கள், பல யூடியூப் சேனல்களுக்காக பிரபலங்களை பேட்டி எடுப்பது, பல நிறுவனங்களின் சினிமா விருது நிகழ்ச்சிகள் என பலவற்றை தொகுத்து வழங்கி வருகிறார். இவர் இன்று அதாவது ஏப்ரல் 16ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார் என்ற தகவல் உலா வருகிறது. மேலும் வீடியோவும் உலா வருகிறது. பிரியங்கா திருமணம் செய்து கொண்டவர் பெயர் வசி என கூறப்படுகிறது. தனது திருமணம் குறித்து பிரியங்கா தனது சமூக வலைதளப் பக்கங்களில் எந்த தகவலும் வெளியிடவில்லை. தனது திருமணம் குறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றை விரைவில் சமூக வலைதளங்களில் பகிர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவருக்கு திருமணம் ஆன தகவல் தெரிந்ததும் பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் திருமணம் குறித்து நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் வட்டாரத்தில் மட்டுமே கூறப்பட்டதாக கூறப்படுகிறது. அதனால்தான் இது குறித்து முன்னரே வெளியில் யாருக்கும் தகவல்கள் கூறப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. பிரியங்காவின் கழுத்தில் வசி தாலி கட்டி முடித்த பின்னர், பிரியங்கா மிகவும் எமோஷ்னலாக வசியைப் பார்த்தார். உடனே, வசி பிரியங்காவின் நெற்றியில் முத்தம் வைத்தார். இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த திருமண வீடியோவில் பிரியங்காவின் அம்மா மற்றும் சகோதரர் ஆகியோர் உள்ளனர்.