சண்முக பாண்டியன் நடித்துள்ள ‘படை தலைவன்’ திரைப்படம் மே 23-ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளார்கள்.
‘சகாப்தம்’ மற்றும் ‘மதுர வீரன்’ ஆகிய படங்களின் மூலம் நாயகனாக அறியப்பட்டவர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன். தற்போது ‘படை தலைவன்’ என்ற பெயரில் புதிய படம் ஒன்றில் நடித்து முடித்துள்ளார். இப்படம் மே 23-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
அன்பு இயக்கியுள்ள இப்படத்தில் சண்முக பாண்டியன், கஸ்தூரி ராஜா, யாமினி சந்தர், கருடன் ராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதன் பெரும்பாலான காட்சிகளை காடுகளுக்குள் படமாக்கி இருக்கிறார்கள். இதன் ஒளிப்பதிவாளராக சதீஷ் குமார், இசையமைப்பாளராக இளையராஜா ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.