யோகி பாபு நடிகராக இருக்க தகுதியே இல்லை: தயாரிப்பாளர் ஆவேசம்!

நடிகர் யோகி பாபு அவர் நடித்த கஜானா திரைப்பட ப்ரோமோஷனுக்கு வரவில்லை என்று அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் ராஜா விமர்சனம் செய்திருக்கிறார்.

சின்னத்திரையில் இருந்து பலர் வெள்ளித்திரைக்கு அடி எடுத்து வைத்திருக்கிறார்கள் அதில் ஒருவர் தான் யோகி பாபு. யோகி பாபு விஜய் டிவியில் ஆரம்பத்தில் சில காமெடி நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்து கொண்டார். அதற்குப் பிறகு இப்போது வெள்ளித்திரையில் காமெடியனாக அறிமுகமாகி, கதாநாயகனாகவும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அதுபோல யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் கஜானா திரைப்படத்தின் ப்ரோமோஷனில் யோகி பாபு கலந்து கொள்ளவில்லை என்று அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் ராஜா மேடையில் கடுமையாக பேசி இருக்கிறார். அதில் அவர் பேசும்போது, யோகி பாபு இந்த மேடையில் இருக்கிறாரா? என்று கேட்க அங்கிருந்தவர்கள் இல்லை என்று சொல்கிறார்கள். பிறகு கூட்டத்தில் இருக்கிறாரா என்று கேட்க அங்கும் இல்லை என்று தெரிந்ததும் ஒரு நடிகனுக்கு தான் நடித்த திரைப்படத்தின் ப்ரோமோஷனில் கலந்து கொள்ள வேண்டும் என்ற பொறுப்பு இல்லை என்றால் நீ நடிகனாக இருக்க லாய்க்கு இல்ல.

ஒரு ப்ரோமோஷனுக்கு வரமாட்டேங்கிறீங்களா? இதுக்கு நான் வன்மையாக கண்டிக்கிறேன். இதுக்கெல்லாம் காலம் பதில் சொல்லும். இவங்க ஏழு லட்சம் ரூபாய் கொடுக்கவில்லை என்றால் அவர் ப்ரோமோஷனுக்கு வரமாட்டார். ஏழு லட்சம் ரூபாய் கொடுத்து இருந்தா யோகி பாபு ப்ரோமோஷனுக்கு வந்து இருப்பார். இது எவ்வளவு பெரிய கேவலமான விஷயம். தன்னுடைய படத்தின் ப்ரோமோஷன்.. அதற்கு அவங்க சொல்றாங்க சொல்லல, பண்றாங்க பண்ணல, என்ன வேணாலும் நடக்கட்டுமே.. தன் படம் என்பது தன்னுடைய குழந்தை. ஒரு நடிகனுக்கு இந்த பொறுப்பு இருக்க வேண்டும் என்று தன்னுடைய ஆதங்கத்தை தெரிவித்து இருக்கிறார்.

யோகி பாபு எதனால் இந்த திரைப்படத்தின் ப்ரோமோஷனுக்கு வரவில்லை என்பது அங்கிருந்து யாரும் விளக்கம் கொடுக்கவில்லை. அதேபோல இது குறித்து யோகி பாபு விளக்கம் கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டுகோள் வைத்து வருகிறார்கள்.