3 வாரங்களில் நிறைய நடந்துவிட்டன: நடிகை குஷ்பு!

3 வாரங்களுக்கு முன்பு ஹேக்கர்களால் முடக்கப்பட்ட தனது எக்ஸ் பக்கம் மீண்டும் செயல்படத் தொடங்கியதாக நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

நடிகையும் பாஜக அரசியல் பிரமுகருமான குஷ்புவின் எக்ஸ் சமூக வலைதள கணக்கு சில தினங்களுக்கு முன்பு ஹேக் செய்யப்பட்டது. இது தொடர்பாக அவர் காவல் துறையில் புகார் அளித்திருந்தார். மேலும் இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் குஷ்பு பதிவிட்டிருந்தார்.

தொடர்ந்து எக்ஸ் தளத்தில் ஆக்டிவாக இயங்கி வந்த குஷ்பு கடந்த மூன்று வாரங்களாக அதில் எதுவும் பதிவிடமுடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது தனது எக்ஸ் பக்கம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் குஷ்பு.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “3 வாரங்களுக்குப் பிறகு ஒருவழியாக திரும்ப வந்துவிட்டேன். உங்கள் அனைவரையும் மிஸ் செய்தேன். இந்த 3 வாரங்களில் நிறைய விஷயங்கள் நடந்துவிட்டன. மீண்டும் ஒருமுறை இணைந்து முன்னேறுவோம். கதைகளைப் பகிர்ந்து கொள்ளவும், உங்களிடமிருந்து நிறைய கேட்கவும் ஆவலுடன் காத்திருக்கிறேன். எல்லாவற்றிற்கும் மிக்க நன்றி. அனைவருக்கும் என் அன்பு” என்று தெரிவித்துள்ளார்.