ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பகல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள ஜெய்ஸ்-இ-முகம்மது அமைப்பின் 4 இலக்குகள், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் 3 இலக்குகள் மற்றும் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் 2 தளங்கள் என 9 பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து, செவ்வாக்கிழமை நள்ளிரவில் இந்திய முப்படைகள் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய பாதுகாப்புப் படைகளுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அமரன் திரைப்பட வசனமான, “இதுதான் இந்திய ராணுவத்தின் முகம்” என்ற வரியைப் பதிவிட்டு ஜெய்ஹிந்த் என்று நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.