டிராகன் நடிகர் காயடு லோஹரின் பெயர் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் வழக்கில் தொடர்புபடுத்தி செய்திகளில் கொண்டு வரப்பட்டுள்ளது.
நடிகர் கயாடு லோஹர் சமீபத்தில் அஸ்வத் மாரிமுத்துவின் டிராகன் படத்தில் நடித்து பிரபலமானார். இவர் தற்போது டாஸ்மாக் ஊழல் தொடர்பான அமலாக்கத்துறையின் ரேடாரில் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழகத்தை உலுக்கிய டாஸ்மாக் ஊழலில் தொடர்புடையவர்களாக சந்தேகிக்கப்படும் நபர்கள் மற்றும் அதிகாரிகள் மற்றும் அவரது நண்பர்கள் ஆகியோரின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் அரசியல் கட்சி தலைவர்கள், அரசு அதிகாரிகள், பிரபலங்கள் உள்ளிட்ட பலர் சிக்கி வருகின்றனர்.
அண்மையில் கூட பராசக்தி, இட்லி கடை, எஸ்.டி.ஆர் 49 மற்றும் இதயம் முரளி உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்த ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகுமாறு அவரை கூறியும் அவர் ஆஜராகவில்லை. இந்த நிலையில் இந்த ஊழல் தொடர்பான புகாரில் நடிகை காயடு லோஹர் பெயர் சிக்கி இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் பிடிபட்ட நபர்கள் கயாடுவின் பெயரை கூறியதாக தெரிகிறது. அதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இரவு விருந்துகளில் கலந்து கொள்ள காயடு 35 லஞ்சம் ரூபாய் வரை வாங்கியதாக தகவல்கள் கூறுகின்றன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாக வில்லை.
2021 ஆம் ஆண்டில் கன்னட திரைப்படமான முகில்பேட் படம் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமான கயாடு ஃப்ரெஷ் ஃபேஸ் சீசன் 12 வென்றார். தொடர்ந்து மலையாளம் மற்றும் தெலுங்கில் பதோன்பதம் நூற்றாண்டு மற்றும் அல்லூரி ஆகிய படங்களில் அறிமுகமான அவர் 2023 ஆம் ஆண்டில், அவர் ஐ பிரேம் யு மூலம் மராத்தியில் அறிமுகமானார். மலையாளத்தில் ஒரு ஜாதி ஜாதகம் படத்திற்கு பிறகு டிராகன் படத்தில் பல்லவி பரசுராம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார் கயாடு. இவர் அடுத்ததாக வெளியாக இருக்கும் இதயம் முரளி, இம்மார்டல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தவிர தமிழில் சிலம்பரசன் டி.ஆருடன் இன்னும் பெயரிடப்படாத ஒரு படத்திலும் நடிக்கிறார்.