மலையாள நடிகர் பகத் பாசிலுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக பாலிவுட் நடிகை ஆலியா பட் கூறினார்.
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஆலியா பட், சமீபத்திய பேட்டியில் மலையாள நடிகர் பகத் பாசிலுடன் நடிக்க விருப்பம் தெரிவித்தார்.
78-ஆவது கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் நடைபெற்றது. அதில் உலகம் முழுவதும் இருந்து திரைத் துறை பிரபலங்கள், ரசிகர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டுள்ளனர். ஆஸ்காருக்கு அடுத்தபடியாக உலக பிரசித்தி பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்திய திரைப்பிரலங்களான ஐஸ்வர்யா ராய், ஜான்வி கபூர், ஆலியா பட், ஊர்வசி ரவுத்தேலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகை ஆலியா பட், பகத் பாசிலை பாராட்டி பேசியுள்ளார். அவர் கூறுகையில், “பகத் பாசில் ஒரு அற்புதமான நடிகர். அவரைப்போலவே அவரது படங்களும் பாராட்டத்தக்கவை. அவர் நடித்த ‘ஆவேஷம்’ படம் எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று. என்றாவது ஒரு நாள் அவருடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்” என்றார்.