நாகர்ஜூனா கூட நடிச்சது எனக்கு பெருமை: நடிகர் தனுஷ்!

நடிகர் தனுஷ் நாகர்ஜூனாவுடன் குபேரா படத்தில் நடித்தது குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார்.

தெலுங்கு சினிமாவின் மிக முக்கியமான இயக்குநராக பார்க்கப்படுபவர் சேகர் கம்முலா. கதையையும், கதை மாந்தர்களையும் மட்டுமே நம்பி படமெடுக்கும் இந்த படைப்பாளியின் ‘ஆனந்த்’ ‘ஃபிடா’ ‘லீடர்’ ‘கோதாவரி’ ‘ஹாப்பி டேஸ்’ ‘லவ் ஸ்டோரி’ உள்ளிட்ட படங்கள் மிகவும் பிரபலமானவை. காதல், சாதி, அரசியல் என அனைத்தையும் கையில் எடுத்து எழுதும் இவரின் கதாபாத்திரங்கள் தெலுங்கு சினிமாவுக்கான முகத்தை மாற்றியதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. தற்போது இவர் தனுஷ் – நாகர்ஜூனா நடிப்பில் குபேரா படத்தை இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் இந்தப்படத்தில் நாகர்ஜூனாவுடன் நடித்தது குறித்து தனுஷ் பேசி இருக்கிறார். இது குறித்து அவர் கூறியதாவது:-

நான் சிறுவயதில் நடிகர் நாகர்ஜூனாவின் நடிப்பை பார்த்து வியந்து இருக்கிறேன். அவரைப்போன்ற ஆளுமைகளுடன் நடிப்பதை பெருமையாக கருதுகிறேன். இப்போதும் நாம் அவர் நடித்த திரைப்படங்களில் அவர் வெளிப்படுத்திய நடிப்பை பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்.

தமிழில் அவர் நடித்ததில் எனக்கு ரட்சகன் திரைப்படம் எனக்குப் பிடித்த திரைப்படங்களில் ஒன்று. நான் குபேரா ஷூட்டிங்கில் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன். நான் நிச்சயமாக என்னுடைய திரைப்படங்களில் பின்பற்றுவேன். அவருக்கு நான் என்னுடைய அடியாழத்தில் இருந்து நன்றியை கூறிக்கொள்கிறேன். படத்தின் டீசருக்கு காட்டிய வரவேற்பு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. ரசிகர்களை மகிழ்விப்பதே என்னுடைய கடமை. இவ்வாறு அவர் பேசினார்.