வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள “மாரீசன்” படத்தின் டீசர் வெளியீடு!

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள ‘மாரீசன்’ திரைப்படம் வரும் ஜூலை மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் “மாரீசன்” படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

வடிவேலு மற்றும் பகத் பாசில் கூட்டணியில் கடந்த 2023-ம் ஆண்டு ‘மாமன்னன்’ படம் வெளியாக மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. அதன் பிறகு இவர்கள் இருவரும் இணைந்து ‘மாரீசன்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளனர். ஆர்பி சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 98-வது படமாக உருவாகும் இப்படத்தை சுதீஷ் சங்கர் இயக்கி உள்ளார். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்த படத்தில் விவேக் பிரசன்னா, ரேணுகா, சித்தாரா மற்றும் பலர் நடித்துள்ளனர். வி.கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம், எழுதி, கிரியேட்டிவ் இயக்குனராக பணியாற்றி உள்ளார். முழுக்க முழுக்க காமெடி காட்சிகளை கொண்டிருக்கும் இப்படத்திற்கு கலைசெல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் வருகிற ஜூலை வெளியாக உள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.