பூஸ்டர் டோஸ் செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு

டெல்லி: பூஸ்டர் டோஸ் செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது.

2 தவணை தடுப்பூசி செலுத்தி, 9 மாதம் அல்லது 39 வாரம் நிறைவடைந்தவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

ஜனவரி 3 ஆம் தேதி முதல் 15 – 18 வயதுடைய சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும். 2007-ம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாக பிறந்த சிறார்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.

கொரோனா தடுப்பூசி 3வது தவணையாக கருதப்படும் பூஸ்டர் தடுப்பூசி ஜனவரி 10 ஆம் தேதி முதல் போடப்படுகிறது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மருத்துவர் பரிந்துரையின் பேரில் பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.