மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த கொட்டாம்பட்டியில் உள்ள பெஸ்ட் மணி கோல்டு நிறுவனத்தில் 166 பவுன் தங்க நகை கொள்ளை அடித்த வழக்கு சம்பந்தமாக தனிப்படையினர் 11 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 166 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்து விசாரணை செய்கிறார்கள்.
மதுரையில் உள்ள தனியாா் நகை அடகு நிறுவனத்தினா் விழுப்புரத்திலிருந்து காரில் 166 பவுன் நகைகள் மற்றும் ரொக்கம் ரூ.98,000 ஆகியவற்றுடன் மதுரைக்கு கடந்த 8 ஆம் தேதி வந்துகொண்டிருந்தனா். கொட்டாம்பட்டி அருகே அய்யாபட்டி விலக்கில், காரை வழிமறித்த கும்பல் ஊழியா் மைக்கேல்ராஜை அரிவாளால் தாக்கிவிட்டு, நகை, பணம் மற்றும் காருடன் தப்பியது.
காவல்துறையினரின் சிறப்புக் குழுக்களின் விசாரணையில் 11 பேர் கைது செய்யப்பட்டனர் மற்றும் ஆயுததாரிகள் கொள்ளையடித்த 166 சவரன் எடையுள்ள நகைகள் மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட பெஸ்ட் மணி தங்கத்தின் நகைகளை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மதுரைக் காவல் கண்காணிப்பாளர் வி.பாஸ்கரன், இந்தக் கொள்ளையில் சிலருடைய தலையீடு இருப்பதாக போலீஸாருக்குப் பலத்த சந்தேகம் இருப்பதாகக் கூறினார்.