சாத்தான்குளம் போலீஸ் கொலைகளை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் பிரபாகர் மும்பாய் உயரிய ரெட் இங்க் (Red Ink Awards for Excellence in Indian Journalism) விருதினை வென்றார்.
ரெட் இங்க் விருதுகள் ஒரு சிறப்பு ஜூரி மூலம் மதிப்பிடப்படுகிறது. இந்தியாவில் மும்பை பிரஸ் கிளப் கொடுக்கும் இந்த வருடாந்திர விருதுகள் பத்திரிகையாளர்களுக்கு தேசிய அங்கீகாரத்தை வழங்குகிறது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர்களான தந்தை மகனான ஜெயராஜ்-பென்னிக்ஸ் கடந்த ஜூன் 19ஆம் தேதி காவல்துறை விசாரணை என்ற பெயரில் இருவரையும் அழைத்துச் சென்று அடித்து சித்தராவதைச் செய்து கொலை செய்தனர். இருவரும் தந்தை – மகன்கள் என்பதால் நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உலக அளவிலும் சில பத்திரிகைகள் காவல்துறையின் இந்த கொடூரத்தை செய்தியை வெளியிட்டு சாத்தான்குளம் சம்பவத்தை உரக்கச் சொன்னது.
சாத்தான்குளம் விவகாரத்தை மிக உன்னிப்பாக கவனித்து கட்டுரை வெளியிட்ட சிறப்பு புலனாய்வு செய்தி பத்திரிகையாளர் பிரபாகர் தமிழரசுக்கு மனித உரிமைகள் பிரிவில் சிறந்த பத்திரிகையாளர் (ரெட் இங்க்) விருதை மும்பை பத்திரிகையாளர் மன்றம் அறிவித்துள்ளது.
ரெட் இங்க் விருது வென்ற தமிழநாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளர் பிரபாகருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
ஆண்டுதோறும் மும்பை பத்திரிகையாளர் மன்றம் கடந்த 10 ஆண்டுகளாக ரெட் இங்க் விருதை இந்திய பத்திரிகையாளர்களை கவுரப்படுத்தவும், ஊக்கப்படுத்தவும் ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.