புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை பிரபல திரைப்பட தயாரிப்பாளர் போனிகபூர் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், பிரபல தயாரிப்பாளருமான போனிகபூர் புதுச்சேரி வந்தார். அவர் மரியாதை நிமித்தமாக முதலமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது துணை சபாநாயகர் ராஜவேலு உடனிருந்தார். தயாரிப்பாளரான போனி கபூர், புதுச்சேரியில் படப்பிடிப்பினை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக போனிகபூர் நிருபர்களிடம் கூறும்போது; மரியாதை நிமித்தமாக முதலமைச்சரை சந்தித்தேன். புதுச்சேரி அருமையான இடம். பல்வேறு கலாசாரங்கள் நிறைந்தது. சுற்றுலா பயணிகளை ஈர்க்க, கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா இடங்களை இன்னும் அழகுபடுத்த வேண்டும் என்றார்.