ஆந்திராவில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 3 ஐ.ஏ.எஸ்.களுக்கு 1 மாதம் சிறை!

ஆந்திராவில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு 1 மாத சிறை தண்டனை விதித்து, உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் கிராம வோளாண் உதவியாளர் (இரண்டாம் கிரேடு) பணி நியமனம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மனுதாரர் மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதில் மனுதாரருக்கு இரண்டு வாரங்களில் பணிநியமனம் வழங்கிட வேண்டும் என ஆந்திர வேளாண் சிறப்பு செயலர் பூணம் மாலக்கொண்டையா, வேளாண் சிறப்பு ஆணையர் எச்.அருண்குமார், கர்னூல் மாவட்ட கலெக்டர் வீரபாண்டியன் ஆகிய மூன்று ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளுக்கு 2019-ம் ஆண்டு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த உத்தரவை நிறைவேற்றாததால், 2020ம் ஆண்டு நீதிமன்ற அவதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி பி.தேவானந்த் கூறியது, கோர்ட் உத்தரவிட்டும் கடமையை சரியாக செய்யாத மூன்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு 1 மாத சிறை தண்டனையும், தலா ரூ. 2ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கிறேன். மேலும் கமிஷனர் அருண்குமார், கலெக்டர் வீரபாண்டியன் ஆகியோர் விடுத்த கோரிக்கையின்படி 1 மாதம் சிறை தண்டனைக்கு பதிலாக 6 வார காலம் சஸ்பெண்ட் செய்கிறேன். வேளாண் சிறப்பு செயலர் பூணம் மாலக்கொண்டையா வரும் மே.13-ம் தேதிக்குள் உயர்நீதிமன்ற கோர்ட் பதிவாளர் முன் சரணடைய வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.