நம்பர் பிளேட்டுகளில், ‘ஜி, அ’ என்ற எழுத்தை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை!

அரசு வாகனங்கள் தவிர மற்ற வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில், ‘ஜி, அ’ என்ற எழுத்தை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, போக்குவரத்து கமிஷனர் நடராஜன் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து, போக்குவரத்து கமிஷனர் நடராஜன்விடுத்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

அரசு வாகனங்களில் மட்டுமே, ‘ஜி’ என்ற ஆங்கில எழுத்தோ, ‘அ’ என்ற தமிழ் எழுத்தோ பயன்படுத்தலாம். அவற்றுக்கு, வரி விலக்கும் காப்பு சான்று விலக்கும் அளிக்கப்படும். ஆனால், அரசுடைமை ஆக்கப்பட்ட நிறுவனங்கள், வாரியங்கள், பொதுத்துறை நிறுவனங்களின் வாகனங்களிலும், ‘ஜி, அ’ என்ற எழுத்தை எழுதியோ, ஸ்டிக்கர் ஒட்டியோ பயன்படுத்துவதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன. அவ்வாறு, பயன்படுத்துவோரை உடனடியாக நீக்க வேண்டும். சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டால் தமிழக மோட்டார் வாகன சட்டத்தின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு நடராஜன் எச்சரித்துள்ளார்.